ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காக, எவ்வளவு வேண்டுமானாலும் மெனக்கெட தயாராக இருக்கிறார் பரத். அவரது சமீபத்திய படங்கள் சறுக்கியதை தொடர்ந்து, தற்போது, சிம்பா என்ற படத்தில், தன் முழு கவனத்தையும் செலுத்தி நடித்து வருகிறார். தனிமையால் வாழ்க்கை திசைமாறிச் செல்லும் ஒரு இளைஞன், எப்போதுமே கற்பனையான உலகில் வாழ்வதும், அவனை இந்த உலகம் எப்படி பார்க்கிறதும் என்பதும் தான், இந்த படத்தின் கதையாம். புதுமுகங்கள் ஹீரோயின்களாக நடிக்கும் இந்த படத்தில், பிரேம்ஜியும், முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடித்துள்ளாராம். தான் நடிக்கும் படங்கள் வெற்றிப் பெற வேண்டும் என்பதற்காக, தன் பெயரையும், பரத் நிவாஸ் என, மாற்றியுள்ளாராம் பரத்.