ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வட மாநில சேனல்களில் பாட்டு, நடனம், நடிப்பு என... ஏகப்பட்ட ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகள் பிரபலமாக உள்ளன. இதில் நடன நிகழ்ச்சியான 'நச் பாலியே' மிகவும் பிரபலம். தற்போது இதன் எட்டாவது சீசன் ஒளிப்பரப்பாக உள்ளது. இதில் பாலிவுட்டின் முன்னணி நடிகையான சோனாக்ஷி நடுவராக பணியாற்ற இருப்பது உறுதியாகியுள்ளது.
இதுப்பற்றி சோனாக்ஷி மகிழ்ச்சிப்பட கூறியதாவது... ‛‛ஏற்கனவே குழந்தைகள் பாடும் பாட்டு நிகழ்ச்சிகளில் நடுவராக நான் பணியாற்றி உள்ளேன். குழந்தைகளுடன் சுலபமாக ஒன்றி விடலாம். ஆனால் நச் பாலியே நிகழ்ச்சி கொஞ்சம் வித்தியாசமானது. நடனத்திற்கு நடுவராக பணியாற்ற வேண்டும். முதன்முறையாக நடன நிகழ்ச்சிக்கு நடுவராக பணியாற்ற உள்ளேன். இதில் பங்கேற்க மிகவும் ஆர்வமாய் உள்ளேன்'' என்று கூறியுள்ளார்.
சோனாக்ஷி சின்ஹா தற்போது ‛நூர்' என்ற படத்தில் நடித்துள்ளார். வருகிற ஏப்., 21-ம் தேதி இப்படம் ரிலீஸாக உள்ளது.