மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
பாலிவுட்டின் கமர்ஷியல் ஹிட் மன்னனான ரோகித் ஷெட்டி இயக்கத்தில் கோல்மால் படங்களின் வரிசையில் நான்காம் பாகமான ‛கோல்மால் அகைன்' படம் உருவாகி வருகிறது. இதில் அஜய் தேவ்கன், தபு, பரிணீதி சோப்ரா, அர்ஷத் வர்சி, ஸ்ரேயாஸ், குணால் கேமு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர். கடந்தவாரம் இதன் படப்பிடிப்புகள் ஆரம்பமான நிலையில் ரோகித் ஷெட்டியின் பிறந்தநாளையொட்டி கோல்மால் அகைன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் ரோகித்துடன் படத்தில் நடிக்கும் அஜய், பரிணீதி உள்ளிட்ட பலரும் மாடி படிக்கட்டில் அமர்ந்து போஸ் கொடுக்கின்றனர். தற்போது இதன் படப்பிடிப்புகள் மும்பையில் உள்ள யாஸ் ராஜ் ஸ்டுடியோவில் நடக்கிறது. இந்தமாதம் முழுக்க அங்கு படப்பிடிப்பு நடக்கிறது. தொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. கோல்மால் அகைன் படத்தை ரிலையன்ஸ் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனமும், ரோகித் ஷெட்டியும் இணைந்து தயாரிக்கிறார்கள்.