Advertisement

சிறப்புச்செய்திகள்

மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எதிர்ப்பு - மக்கள் சூப்பர் ஸ்டார் பட்டம் நீக்கம்

14 மார், 2017 - 12:28 IST
எழுத்தின் அளவு:
Makkal-Super-Star-title-removed

ராகவா லாரன்ஸ், நிக்கி கல்ராணி நடித்து சமீபத்தில் வெளிவந்த படம் மொட்ட சிவா கெட்ட சிவா. இந்தப் படத்தில் இயக்குனர் சாய்ரமணி ராகவா லாரன்சுக்கு மக்கள் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை டைட்டில் கார்டில் போட்டிருந்தார். "ரஜினிக்கு கலைப்புலி தாணு சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்து வரலாற்றில் இடம் பிடித்த மாதிரி லாரன்சுக்கு நான் மக்கள் சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்தேன். இதனை லாரன்சுக்கு தெரியாமலேயே செய்தேன்" என்று சாய்ரமணி கூறினார்.


"எனக்கு மக்கள் சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம். என் அம்மா கண்மணியின் பெயர்தான் எனக்கு பட்டம். சினிமாவில் ஒரே சூப்பர் ஸ்டார் என் தலைவர் ரஜினிதான்" என்று ராகவா லாரன்ஸ் விளக்கம் அளித்தார். ஆனால் இதனை ஏற்காத ரசிகர்கள் ஆங்காங்கே தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். இதனால் இயக்குனர் சாய்ரமணி, ரஜினி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டிருப்பதோடு டைட்டிலிலிருந்து மக்கள் சூப்பர் ஸ்டார் பட்டத்தை நீக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:


சூப்பர் ஸ்டாரின் ரசிகனான எனக்கு, சூப்பர் ஸ்டாரின் ரசிகரை வைத்து படம் இயக்கியதில் மட்டற்ற மகிழ்ச்சியில் இருந்தேன். தெரியாமல் நடந்த மக்கள் சூப்பர் ஸ்டார் டைட்டில் பிரச்சனையால் மிகவும் நான் கவலைப்பட்டிருந்தேன். லாரன்ஸ் மாஸ்டருடன் கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து பழகி வந்த எனக்கு அவரின் மேல் உள்ள அன்பின் அடிப்படையிலும், மக்களுக்கு உதவி செய்து வரும் அவர், மேலும் தொடர்ந்து மக்கள் சேவை செய்ய வேண்டும் எனும் நல்ல எண்ணத்தின் அடிப்படையிலும் தான் அந்த டைட்டிலை வைத்தேன். ஆனால் அது சூப்பர் ஸ்டார் ரசிகர்களின் மனதை புண்படுத்திவிட்டது. அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். தப்போது சில திரையரங்குளில் மக்கள் சூப்பர் ஸ்டார் கார்டு எடுக்கப்பட்டுவிட்டது. மற்ற திரையரங்குகளிலும் எடுத்து கொண்டே வருகிறோம்" என்கிறார் சாய்ரமணி.


ஆனால் இது எதையும் மனிதில் ஏற்றிக் கொள்ளாத ரஜினிகாந்த், மொட்ட சிவா கெட்ட சிவா படத்தை பார்த்து படக்குழுவினரை மனதார பாராட்டினார். அதனால்தான் அவர் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். இந்த சந்திப்பின்போது மக்கள் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்தும், அது நீக்கப்படுவது குறித்தும் இயக்குனர் சாய்ரமணி ரஜினியிடம் தெரிவித்தார். அதனை தனக்கே உரிய புன்கையுடன் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறார் ரஜினி.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in