Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிவாஜி ராவ், ரஜினிகாந்த் ஆக மாறிய நாள்

13 மார், 2017 - 13:02 IST
எழுத்தின் அளவு:
Sivaji-rao-turns-as-Rajini

தமிழ்த் திரையுலகத்தில் மட்டுமல்லாது, இந்தியத் திரையுலகத்திலும் முக்கியமான நடிகர்களில் மிக முக்கியமான நடிகராக 40 வருடங்களுக்கும் மேலாக விளங்கிக் கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். 1975ம் ஆண்டு வெளிவந்த 'அபூர்வ ராகங்கள்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். சிவாஜிராவ் கெய்க்வாட் என்று பெற்றோர் வைத்த பெயரை சினிமாவுக்காக 1975ம் ஆண்டு 'ஹோலி' தினத்தன்றுதான் இயக்குனர் பாலசந்தர் ரஜினிகாந்த் என்று பெயர் மாற்றம் செய்தார்.


ரஜினிகாந்த் என்ற பெயரை வைத்ததும் இயக்குனர் பாலசந்தர் காலில் விழுந்த ரஜினிகாந்த் நல்ல வில்லனாக வர வாழ்த்துமாறு கேட்டாராம். ஆனால், பாலசந்தர் நீ பெரிய ஹீரோவாக வருவாய் என்று வாழ்த்தியிருக்கிறார்.


ஏற்கெனவே சிவாஜி என்ற பெயரில் நடிகர் இருப்பதால் சிவாஜிராவ் என்ற பெயரை வேறு பெயராக மாற்ற யோசித்த பாலசந்தர் அவர் இயக்கிய 'மேஜர் சந்திரகாந்த்' படத்தில் சந்திரகாந்தின் இரு மகன்களுக்கு ஸ்ரீகாந்த், ரஜினிகாந்த் என்று பெயர் வைத்திருந்தார். ஸ்ரீகாந்த் என்ற பெயரில் நடிகர் இருந்ததால் ரஜினிகாந்த் என்ற பெயரை சிவாஜிராவிற்கு வைத்திருக்கிறார்.


ரஜினிகாந்த் என்ற பெயர் அடுத்த ஐந்து வருடங்களுக்குள் ஒரு மந்திரச் சொல்லாகவே மாறி தமிழ்த் திரைப்பட ரசிகர்களைக் கட்டிப் போட ஆரம்பித்தது. அன்றிலிருந்து இன்று வரை அதே 'ஸ்டார் வேல்யூ'வுடன் ஒரு நடிகரால் இத்தனை வருடங்களாக இருக்க முடிகிறது என்பது சாதாரண விஷயமல்ல. வேறு எந்த ஒரு நடிகர் நினைத்தாலும் ரஜினிகாந்த் என்ற நடிகரின் சாதனைகளை மட்டுமல்ல, 'சூப்பர் ஸ்டார்' என்பதையும் கூட தங்களுக்காக சூட்டிக் கொள்ள முடியாது.


ஒரு பஸ் கண்டக்டராக இருந்தவர் இன்று பல கோடிகள் சம்பளம் வாங்கும் நடிகராக மாறியிருப்பது அவருடைய திறமையாலும், உழைப்பாலும் மட்டுமே தவிர வேறு எந்த ஒன்றாலும் இருக்க முடியாது. ஒரு நடிகருக்கு வரவேற்பும், வெற்றியும் தானாகத் தேடி வர வேண்டும். அது ரஜினிகாந்தைத் தேடி வந்தது. ஆனால், இன்று சிலர் தாங்களாகவே தங்களை ரஜினிகாந்த்தாகவும், சூப்பர் ஸ்டார் ஆகவும் நினைத்துக் கொள்கிறார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in