Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஐஸ்வர்யா தனுஷ் 'பரத நாட்டிய' வீடியோக்கள் நீக்கம் ?

12 மார், 2017 - 11:58 IST
எழுத்தின் அளவு:
why--aishwarya-dhanush-dance-video-is-removed

ஐ.நா. சபையில் மகளில் தினத்தன்று ரஜினிகாந்தின் மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நடன நிகழ்ச்சியின் வீடியோ யு டியுபில் சிலரால் பதிவேற்றம் செய்யப்பட்டது. அந்த வீடியோவில் ஐஸ்வர்யா தனுஷின் நடன நிகழ்ச்சியைப் பார்த்த பலரும் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தார்கள்.


பிரபல நடனக் கலைஞரான அனிதா ரத்னம், “ஐ.நா. சபையில் பரதநாட்டியத்தின் பரிதாபநிலை” என விமர்சித்திருந்தார். அவருக்கு ஆதரவாக பரதம் தெரிந்த பலரும் அவரவர் கருத்துக்களை பதிவிட ஆரம்பித்தனர். எவ்வளவோ சிறந்த பரதக் கலைஞர்கள் இந்தியாவில் இருக்க, பிரபலமான விஐபி குடும்பத்தின் மகள் என்ற ஒரே காரணத்தால் ஐ.நா. சபையில் ஐஸ்வர்யா தனுஷின் நடனத்தை நடத்தியிருக்க வேண்டுமா என சாதாரண மக்களும் கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள்.


கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் இந்த விஷயம்தான் டிரென்டிங்காக இருக்கிறது. ஃபேஸ்புக், டுவிட்டர், யு டியூப் ஆகியவற்றில் ஐஸ்வர்யா தனுஷின் நடன நிகழ்ச்சியை விமர்சித்து பல்வேறு கருத்துக்களும், மீம்ஸ்களும், வீடியோ மீம்ஸ்களும் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள பல்வேறு ஊடகங்களும் இது பற்றி செய்தி வெளியிட்டு இந்த விவகாரத்தை மேலும் விஸ்வரூபம் எடுக்கச் செய்துவிட்டார்கள்.


இதனிடையே, ஐஸ்வர்யா தனுஷின் ஐ.நா. சபை நடன நிகழ்ச்சியை யு டியூபில் யாரெல்லாம் பதிவேற்றியிருக்கிறார்களோ, அவர்களை அந்த வீடியோக்களை உடனே நீக்குமாறு சொல்லப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா. சபையில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் சிலர் மொபைல் போனில் எடுத்த வீடியோக்களைத்தான் யு டியூபில் பதிவேற்றியிருந்தார்கள்.


அந்த வீடியோக்கள் மற்றும் அந்த நடனத்தை கிண்டலடித்து போடப்பட்டுள்ள வீடியோ மீம்ஸ்கள் ஆகியவற்றையும் நீக்கும் பணிகள் நடந்து வருவதாகத் தெரிகிறது. அதே சமயம், ஐஸ்வர்யா தனுஷை பலர் விமர்சித்து வரும் நிலையில் அவருடைய நட்பு வட்டாரத்தைச் சேர்ந்த சில பிரபலங்கள் அவருக்கு ஆதரவாகவும் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்து வருகிறார்கள்.


Advertisement
சிக்ஸ்பேக் அஜித்திற்கு பாடல் கம்போசிங்!சிக்ஸ்பேக் அஜித்திற்கு பாடல் ... திருமண செய்திகளுக்கு அஞ்சலி மறுப்பு திருமண செய்திகளுக்கு அஞ்சலி மறுப்பு


வாசகர் கருத்து (14)

Shanu - Mumbai,இந்தியா
16 மார், 2017 - 21:24 Report Abuse
Shanu எல்லா அநியாயங்களையும் கமல் தட்டி கேட்பதாக அவரே சொல்கிறார். இந்த ஆட்டத்தை பத்தி ஒண்ணும் சொல்ல வில்லை. இதிலிருந்து தெரிகிறது, கமலும் சாதாரண அரசியல் குணம் உள்ள மனிதர் தான்.
Rate this:
Vaal Payyan - Chennai,இந்தியா
13 மார், 2017 - 10:48 Report Abuse
Vaal Payyan இந்த நாட்டில் மட்டும் தான் திறமைக்கு வாய்ப்பும் இல்லை , மரியாதையும் இல்லை .. எந்த தகுதி அடிப்படையில் இவரை பரதத்திற்கு அதுவும் ஒரு நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ஐ நா வில் ஆட தேர்ந்து எடுத்தார்கள் என்று யாராவது சொல்ல முடியுமா தமிழ்நாட்டில் பரத கலைஞர்கள் இல்லையா பரதத்திற்க்காக உயிர் மூச்சை கொடுத்து ஆடுபவர்கள் இல்லையா ... வெறும் சூப்பர் ஸ்டார் பொண்ணு என்கிற தகுதி போதுமா ... பரதம் தெரிந்த மக்களிடம் இவரின் ஆட்டத்தை பற்றி கேளுங்கள் , கண்ணீர் விட்டு சொல்லுவார்கள் அந்த கலையை எப்படி கேவல படுத்தி உள்ளார் என்று சே இந்த நாட்டிற்கு என்று தான் விமோசனம் வருமோ தெரியவில்லை
Rate this:
SINGAM - chennai,இந்தியா
13 மார், 2017 - 08:59 Report Abuse
SINGAM உண்மை என்னவென்றால் ராஜனிக்கு வெகு சிறப்பாக நடிக்க தெரியாது. அவர் மகளுக்கு சிறப்பாக பாரத நாட்டியம் தெரியாது
Rate this:
Ramesh - Sydney,ஆஸ்திரேலியா
13 மார், 2017 - 03:55 Report Abuse
Ramesh இது எல்லா பரத கலைஞர் அவமானம்
Rate this:
சத்திவேல்,டிறம்மன்,நோர்வே(Norway). பத்திரிகையில் முன்கூட்டியே இவர்தான் நடனமாடுவது என்று செய்தி வந்தது. அப்ப .வே எதிர்த்துக்குரல் கொடுத்திருக்கலாம். எல்லாத்தையும் விட்டுட்டு.. இப்ப..
Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film RK Nagar
  • ஆர்.கே.நகர்
  • நடிகர் : வைபவ்
  • நடிகை : சனா அல்தாப்
  • இயக்குனர் :சரவண ராஜன்
  Tamil New Film Jippsy
  • ஜிப்ஸி
  • நடிகர் : ஜீவா
  • நடிகை : நடாஷா சிங்
  • இயக்குனர் :ராஜூ முருகன்
  Tamil New Film Chennai 2 Bangkok
  Tamil New Film Amman Thayee
  • அம்மன் தாயி
  • நடிகர் : அன்பு (புதியவர்)
  • நடிகை : ஜூலியானா
  • இயக்குனர் :சரண் (புதியவர்)

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in