விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
பெரும்பாலும் மற்ற நடிகர்கள் நடித்த படங்களின் ஆடியோ விழாக்களில் அதிகமாக தலைகாட்டாதவர் விஷால். ஆனால் நடிகர் சங்கத்தை தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத் தேர்தலிலும் போட்டியிடும் அவர், தற்போது சில ஆடியோ விழா மேடைகளில் தோன்றி அந்த படங்களை வாழ்த்துவதோடு, தன்னை தாக்கிப்பேசி வரும் எதிரணியிருக்கு பதிலடி கொடுக்கவும் அந்த மேடைகளை பயன்படுத்திக்கொண்டு வருகிறார்.
அந்தவகையில், நேற்று முன்தினம் பரத் நடித்துள்ள சிம்பா படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்டார் விஷால். அப்போது அவர் தயாரிப்பாளர் சங்கத்தில் போட்டியிடும் எதிரணியிருக்கு கொடுக்க வேண்டிய பதிலை அவர் சார்பில் டைரக்டர் மிஷ்கின் கொடுத்தார். அதனால் விஷால் அங்கு தேர்தல் குறித்து அதிகமாக பேசவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அதன்காரணமாக, அவர் தயாரிப்பாளர் சங்கத்தேர்தல் பற்றி சில வார்த்தைகளோடு நிறுத்திக்கொண்டார்.
அதேசமயம், பரத்தின் நடிப்பைப்பற்றி பெருமையாக பேசினார். குறிப்பாக, தமிழ் சினிமாவில் சிறப்பாக நடனமாட கூடிய நடிகர்களில் பரத் குறிப்பிடத்தக்கவர். அந்தவகையில், விஜய்க்கு பிறகு நல்ல நடனமாடக்கூடியவர் பரத்தான் என்றார் விஷால். அவர் அப்படி சொன்னதும் மேடையில் அமர்ந்திருந்த பரத், எழுந்து நின்று அவரைப் பார்த்து வணங்கிவிட்டு இருக்கையில் அமர்ந்தார்.