ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள சினிமாவின் முக்கியமான இயக்குனர் பிரியதர்ஷன், இந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளில் 60-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி உள்ளார். தமிழில் கோபுர வாசலிலே, லேசா லேசா, சின்ன மணிக்குயிலே, சிநேகிதியே படங்களை இயக்கி உள்ளார். இவர் இயக்கிய காஞ்சீவரம் சிறந்த படத்துக்கான தேசிய விருது பெற்றது. இதில் நடித்த பிரகாஷ்ராஜ் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றுள்ளார். பிரியதர்ஷன் 2012ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றார்.
பல்வேறு சர்வதேச படவிழாக்களில் நடுவராக இருந்த பிரியதர்ஷன், தற்போது 2016ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருது தேர்வுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை நேற்று மத்திய அரசு அறிவித்தது. இதற்காக திரையுலக பிரமுகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். பிரியதர்ஷன் இயக்கி பிரகாஷ்ராஜ் நடித்துள்ள சில சமையங்களில் படம் தேசிய விருதுக்கான போட்டியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.