ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
ஹாலிவுட் சினிமாவில் விலங்குளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்களில் வசூலை குவித்த படம் கிங்காங். இதுவரை இந்த கதையை அடிப்படையாக கொண்டு பல தலைப்புகளில் பல பாகங்களில் படங்கள் வந்து விட்டது. மோசமான விமர்சனங்களை எதிர்கொண்ட கிங்காங் படங்கள் கூட வசூலில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது.
இந்போது அந்த வரிசையில் வருகிறது காங் ஸ்கல் ஐலேண்ட். கிங்காங் என அழைக்கப்படும் ராட்சத கொரிலா குரங்கு காட்டுக்குள்ளிலிருந்து நகரத்திற்கு வந்த செய்த அட்டகாசம்தான் இதுவரை படமாக வந்தது. இப்போது ஒரு தனித் தீவுக்குள் புகுந்து அது செய்யும் அட்டகாசத்தையும் அதை அடக்கும் போராட்டத்தையும் மையமாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளது. நவீன சினிமா தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மிரட்டலான படமாக தயாராகி உள்ளது.
ஜோர்டன் வாக்ட் ரோபெட்ஸ் இயக்கி உள்ள இந்தப் படத்தை லெஜண்டரி பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. ஹென்னி ஜாக்மேன் இசை அமைத்துள்ளார், லெர்ரி போங் ஒளிப்பதிவு செய்துள்ளார். டாம் ஹிட்டஸ்டான், சாமுவேல் ஜாக்சன், ஜான் காட்மேன், பிராய் லார்சன் உள்ளிட்ட முன்னணி ஹாலிவுட் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
நாளை உலகம் முழுவதும் வெளிவருகிறது. இந்தியாவில் வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. ஆங்கிலத்துடன் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளிவருகிறது. 3டி தொழில்நுட்பத்திலும் வெளிவருகிறது. தமிழ் படங்களுக்கு நிகராக சுமார் 200 தியேட்டர்களில் வெளியாகிறது.