ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சுப்ரமணியபுரம் படப்புகழ் நடிகை ஸ்வாதி, தெலுங்கிலும் பல படங்களில் நாயகியாக நடித்துள்ளார். 2015ல் ஸ்வாதி நடித்த திரிபுரா எனும் திகில் படத்திற்கு பின்னர் ஸ்வாதி வேறு எந்த தெலுங்கு படங்களிலும் இதுவரை ஒப்பந்தம் ஆகவில்லை. இந்நிலையில், தமிழில் விஜய் சேதுபதி மற்றும் ரித்திகா சிங் நடிப்பில் வெளிவந்த ஆண்டவன் கட்டளை படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஸ்வாதி நாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நிகில் நடிப்பில் வீடு தேடா, அல்லரி நரேஷ் நடிப்பில் பிரதர் பொம்மலி போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சின்னி கிருஷ்ணா ஆண்டவன் கட்டளை படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்கவுள்ளார். ரித்திகா சிங் நடித்த ரிப்போட்டர் கதாபாத்திரத்தில் ஸ்வாதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். புதுமுக நடிகர் ரக்ஷக் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நடிகர் தரணி முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். தொழில் நுட்ப கலைஞர்களை தேர்வு செய்துவரும் இயக்குனர் கிருஷ்ணா விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.