ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அதிகமுறை ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்ட படம் என்ற சாதனையை இதுவரை பெற்றிருந்தது சிம்பு நடித்த வாலு படம்தான். இப்போது அந்த சாதனையை முறியடித்துவிட்டது - மொட்ட சிவா கெட்ட சிவா படம். இரண்டு வருடங்களாக தயாரிப்பிலிருந்த 'மொட்ட சிவா கெட்ட சிவா' படத்தின் இசை வெளியீடு கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற்ற பிறகு, பிப்ரவரி 17ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய இருப்பதாக அதிகாரபூர்வ அறிவித்தனர்.
'மொட்ட சிவா கெட்ட சிவா' படத்தின் தயாரிப்பாளரான வேந்தர் மூவீஸ மதன் வாங்கிய கடன் தொடர்பாக ஏகப்பட்ட பஞ்சாயத்துகள் இருந்தன. அதன் காரணமாக ஏற்பட்ட வழக்குகளால் திட்டமிட்ட தேதியில் மொட்ட சிவா கெட்ட சிவா படம் வெளியாகவில்லை. பிப்ரவரி மாதத்திலேயே பல தேதிகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் அறிவிக்கப்பட்ட தேதிகளில் படம் வெளிவரவில்லை.
இந்தப் படத்தினால் சிவலிங்கா உட்பட வேறு படங்கள் வெளியாகமுடியாமல் தள்ளி வைக்கப்பட்டன. இந்நிலையில் பஞ்சாயத்துகள் பேசி முடிக்கப்பட்டதன் அடிப்படையில் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. எனவே மார்ச் 9 அன்று படத்தை வெளியிட உள்ளதாக இரண்டு தினங்களுக்கு முன் அறிவித்தனர்.
இதன்காரணமாக, ஏற்கனவே மார்ச் 10 வெளியிட தயார்நிலையில் உள்ள எங்கிட்ட மோதாதே, புரூஸ்லீ ஆகிய இரண்டு படங்களும் தள்ளி வைக்கப்பட்டன. மாநகரம் படத்தை மட்டும் திட்டமிட்டபடி மார்ச் 10 அன்று வெளியிட உள்ளனர். எங்கிட்ட மோதாதே, புரூஸ்லீ படங்களுக்கு வேறு தேதிகள் குறிக்கப்பட்டு விளம்பரங்கள் வந்துவிட்டன.