ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மணிரத்னம் இயக்கிய கேங்ஸ்டர் படங்களில் நாயகன், தளபதி படங்கள் குறிப்பிடத்தக்கவை. இன்றுவரை அந்த படங்கள் பேசப்பட்டு வருகின்றனர். இதில் தளபதி படத்தில் ரஜினியும், மம்மூட்டியும் நண்பர்களாக நடித்திருந்தனர். அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை காற்றுவெளியிடை படத்தை அடுத்து இயக்குகிறார் மணிரத்னம். அதற்கான கதை விவாதமும் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அதேசமயம், இந்த படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது பற்றிய தகவல்களும் தற்போது வெளியாகியுள்ளன.
அதாவது, மணிரத்னம் இயக்கும் தளபதி-2வில் நாயகனாக ரஜினி நடித்த வேடத்தில் விஜய் நடிக்கிறாராம். மம்மூட்டி நடித்த வேடத்தில் விக்ரம் நடிக்கிறாராம். இவர்கள் இருவரிடமும் சமீபத்தில் கதையை சொல்லி ஓகே பண்ணிவிட்டாராம் மணிரத்னம். விஜய், விக்ரம் இருவருமே நண்பர்கள் என்பதால் அவர்களை இணைப்பது எளிதாகி விட்டதாம். மேலும், அட்லி இயக்கும் படத்தில் நடித்து முடித்ததும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில், மணிரத்னம் படத்தை முடித்த பிறகுதான் முருகதாஸ் இயக்கத்தில விஜய் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தின் அறிவிப்பு விஜய்யின் பிறந்த நாளில் வெளியிடப்பட உள்ளதாம்.