ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தீபாவளி வெளியீட்டை நோக்கி பரபரப்பாக இயங்கி வருகிறது '2.0' படக்குழு. ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் எமி ஜாக்சன் கிட்டத்தட்ட பல மாதங்களாக படப்பிடிப்பில் கலந்துகொண்டு வந்தார். எமி ஜாக்சன் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளும் படமாக்கி முடிந்துவிட்டதாம். எனவே 2.0 படக்குழுவுக்கு 'குட்பை' சொல்லிவிட்டு லண்டனுக்கு பறந்துவிட்டார் எமிஜாக்சன்.
இந்த தகவலை எமி ஜாக்சனே தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார். ''கடந்த 18 மாதங்களாக பரபரப்பாக நடந்து வந்த '2.0' படப்பிடிப்பில் என்னுடைய போர்ஷன் முடிவுக்கு வந்துவிட்டது. ரொம்பவும் உணர்ச்சிகரமாக இருக்கிறது.... '2.0' படக்குழுவினருக்கு எனது அன்பை தெரிவித்துக்கொள்கிறேன். நான் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது!'' என்று சமூகவலைதளத்தில் குறிப்பிட்டிருக்கிறார் எமி ஜாக்சன்.
இந்த தகவலோடு இயக்குனர் ஷங்கருடன் '2.0' செட்டில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பதிவேற்றியிருக்கிறார் எமி ஜாக்சன். '2.0' படத்தில் வழக்கமான தமிழ் சினிமா கதாநாயகிபோன்ற வேடத்தில் நடிக்காமல், படத்தின் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் எமி ஜாக்சன்.
ஹீரோ ரஜினிக்கும், வில்லன் அக்ஷய்குமாருக்கும் இணையாக இந்த கேரக்டரை வடிவமைத்திருக்கிறார்ம் ஷங்கர். கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய் பொருட்செலவில் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது லைகா புரொடக்ஷன்ஸ்.