Advertisement

சிறப்புச்செய்திகள்

மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முல்லை பெரியாறு அணை உடைந்தால் சாகப்போவது தமிழர்கள்தான் : டேம் 999 பட இயக்குநர் பேட்டி!

22 நவ, 2011 - 15:35 IST
எழுத்தின் அளவு:

 தமிழகம்-கேரளம் இடையே நெடுங்காலமாக உணர்வு பிரச்சனையாக இருந்து  வரும் முல்லை பெரியாறு அணையை வைத்து, ஆங்கிலத்தில் டேம் 999 என்ற படத்தை உருவாக்கி இருக்கும் டைரக்டர் சோஹன் ராய், முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் மடியப்போவது தமிழக மக்கள்தான். இந்தப் படத்தைப் பார்த்த பின்பு முல்லைப் பெரியாறு அணையை உடைத்து புதிய அணையை கட்டுவதற்கு தமிழக அரசே ஒத்துழைக்கும் என்று கூறி சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.

பென்னி குக் என்ற ஆங்கிலேயர், தன் சொத்துக்களை எல்லாம் விற்று முல்லை பெரியாறு அணையை கட்டினார். நூற்றாண்டை கடந்து இருக்கும் இந்த அணை, தமிழ்நாட்டின் ஜீவாதார அணைகளில் ஒன்று. இந்நிலையில் அணை வலுவிழந்து உள்ளதாகவும், உடையும் அபாயத்தில் இருப்பதாகவும், உடனே அணையை உடைத்து, புது அணை கட்ட வேண்டும் என்று கூறி வருகிறது கேரள அரசு. மேலும் அதற்கான முயற்சியிலும் அம்மாநில அரசு இறங்கியிருக்கிறது. கேரளாவின் இந்த செயலுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இதுதொடர்பான வழக்கும் நீண்ட நாட்களாக சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்நிலையில் கேரளா சேர்ந்த டைரக்டர் சோஹன் ராய், ஆங்கிலத்தில் டேம் 999 என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கியுள்ளார். இந்தபடம் தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்தவாரம் வெளியாக இருக்கிறது. படத்தில் அணை உடைவது போலவும், அதிலிருந்து வெளியாகும் வெள்ளத்தில் சிக்கி ஏராளமானோர் உயிரிழப்பது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 100 ஆண்டு காலம் பழமை வாய்ந்த முல்லைப் பெரியாறு அணையை முன்னெச்சரிக்கையாக இடிக்காவிட்டால் பேரிடர் ஏற்படும் என்பது போல் இப்படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

படம்குறித்து டைரக்டர் சோஹன் ராய் அளித்துள்ள பேட்டியில், சீனாவில் 1975ம் ஆண்டு பான்கியோ என்ற அணை உடைந்த போது சுமார் 2 லட்சம் பேர் வரை உயிரிழந்தனர். அதே அபாயம் இப்போது 100 ஆண்டு பழமை வாய்ந்த முல்லை பெரியாறு அணைக்கும் ஏற்பட்டுள்ளது. அரசியல் பிரச்சனை காரணமாக இந்த விவகாரத்தில் எந்த ஒரு முடிவு எட்டப்படவில்லை. இந்தப் படத்தில் முல்லைப் பெரியாறு அணையைக் காண்பிக்காவிட்டாலும், கேரள மாநிலம் ஆலப்புழையில் படமாக்கப்பட்ட காட்சிகள் முல்லைப் பெரியாறு அணை பிரச்னையைப் பிரதிபலிக்கும். முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் மடியப்போவது தமிழக மக்கள்தான். இந்தப் படத்தைப் பார்த்த பின்பு, முல்லைப் பெரியாறு அணையை உடைத்து, புதிய அணையை கட்டுவதற்கு தமிழக அரசே ஒத்துழைக்கும் என்று கூறியுள்ளார்.

தமிழக-கேரளா இடையே முல்லை பெரியாறு அணை விவகாரம் பெரும் பிரச்சனையாக இருந்து வரும் வேளையில், சோஹன் ராயின் டேம் 999 படமும், அதற்கு அவர் கொடுத்துள்ள பேட்டிம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ம.தி.மு.க. ரகளை : இதனிடையே இப்படத்தின் பிரிவியூ காட்சி, சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் திரையிடப்படுவதாக இருந்தது. இந்நிலையில், இதை திரையிடக்கூடாது என வலியுறுத்தி ம.தி.மு.க.,வினர் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் பிரிவியூ காட்சி ரத்து செய்யப்பட்டது. மேலும் இந்தபடத்திற்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கமும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Advertisement
கருத்துகள் (24) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (24)

gunasekaran - chennai,இந்தியா
24 டிச, 2011 - 11:32 Report Abuse
 gunasekaran கேரளாக்கு கடுமையான பொருளாதார நெருக்கடி,மேலும் தமிழ் திரைப்பட துறை,சென்னை,கோவை,திருப்பூர்ல் தினம் ஒரு மலையாளி குடியேறுகிறான்,இதை தடுக்கணும்
Rate this:
gunasekaran - chennai,இந்தியா
24 டிச, 2011 - 11:18 Report Abuse
 gunasekaran முல்லைபெரியர் அணைப் பகுதிகளை தமிழகத்துடன் கண்டிப்பாக இணைத்தால் மட்டுமே இப்பிரச்சனைக்கு தீர்வு காணமுடியும்.அதற்க்கு நாம் ஒற்றுமையுடன் போராடவேண்டும்.
Rate this:
SENTHIL - pudukkottai,இந்தியா
19 டிச, 2011 - 22:52 Report Abuse
 SENTHIL The problem is nothing,kerala peoples are 5 th sence people, but TN peoples have 6th sence because we r seeing 7th sence(elam arivu)
Rate this:
மனோகர் - tuticorin,இந்தியா
17 டிச, 2011 - 13:14 Report Abuse
 மனோகர் மலையாளிகளே ஏன்டா உங்களுக்கு இவ்வளவு கேவலமான புத்தி, நீங்க மட்டும் நல்லா இருந்த போதுமாடா, மத்தவங்களும் நல்லா இருக்கணும் னு நினைங்க.
Rate this:
ponmanaselvan - salem,இந்தியா
17 டிச, 2011 - 12:22 Report Abuse
 ponmanaselvan டேம் உடையட்டும். உடைந்தாலும் எங்களுக்கு பயம் இல்ல......செல்வா
Rate this:
மேலும் 19 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in