ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழில் விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. சின்ன அசின் என்று நடிகர் விஜய்யால் புகழப்பட்டவர் பூர்ணா, தொடர்ந்து துரோகி, கந்தக்கோட்டை, ஆடுபுலி, வேலூர் மாவட்டம், வித்தகன் என்று நடித்துள்ளார். சமீபத்தில் பூர்ணா கொச்சியில் ரூபாய் 2 கோடி மதிப்பில் ஒரு வீடு கட்டியுள்ளார் என்று செய்திகள் வந்தது.
இதுபற்றி அவரிடம் கேட்டபோது, நான் 4 வயசுல இருந்தே பரதம், குச்சிபுடி உள்ளிட்ட நடனங்களை கற்று வருகிறேன். மாதத்துக்கு இரண்டு முறை டான்ஸ் ஷோ பண்ணுவேன். என்கிட்ட ஒரு கெட்ட பழக்கம், நிறைய ஷாப்பிங் செய்வது. இப்பவும் கூட என் வீட்டில் பார்த்தா, பில் கூட கிழிக்காத நிறைய டிரஸ் இருக்கும். எப்பவும் எதாச்சும் வாங்கிட்டே இருப்பேன். இப்படி செலவு செய்யாத என்று அம்மா கூட பலமுறை சொல்லி பார்த்தாங்க. ஆனா நான் கேட்கல. கடைசியா, கொச்சியில ஒரு பிளாட் விலைக்கு வருவதை அறிந்த என்னுடைய அம்மா, அதை வாங்க முடிவு பண்ணுனாங்க. நானும் என்னிடம் உள்ள ரொக்க பணம் எல்லாத்தையும் போட்டு, பற்றாக்குறைக்கு வங்கியில் கடன் வாங்கி, ரூ.80லட்சத்தில் அந்த பிளாட்டை வாங்கினோம். இதுதான் நிஜம். ஆனா, அதுக்குள்ள 2 கோடிக்கு பிளாட் வாங்கியிருக்கேன் என்று செய்தி வந்திருச்சு. அதில் உண்மையில்லை. இம்மாதம் கடைசியில புதுவீட்டில் குடியேறுகிறோம் என்று கூறினார்.