Advertisement

சிறப்புச்செய்திகள்

மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜாக்கிசான் படங்களுக்கு நிகராக டிஜிட்டல் பாட்ஷாவிற்கு வரவேற்பு - லதா ரஜினி

04 மார், 2017 - 16:02 IST
எழுத்தின் அளவு:
Digital-Baasha-get-response-like-Jackie-chan-movie-says-Latha-Rajinikanth

ஜாக்கிச் சானின் படங்களுக்கு இருக்கும் வரவேற்பை விட டிஜிட்டல் பாட்ஷாவிற்கு அமோக வரவேற்பு இருக்கிறது என்று லதா ரஜினிகாந்த் கூறியுள்ளார். ரஜினியின் திரையுலக வரலாற்றில் மிக முக்கியமான படம் ‛பாட்ஷா'. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 1995-ம் ஆண்டு வெளியான இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது 22 ஆண்டுகள் கழித்து டிஜிட்டல் தொழில்நுட்பத்தில், லட்சுமி நாராயணனின் 5.1 ஒலி அமைப்புகளும், ஏனைய நவீன தொழில்நுட்ப வேலைப்பாடுகளும், டிஜிட்டல் பதிப்பில் உருவாகி இருக்கும் பாட்ஷா நேற்று வெளியானது. ரஜினியின் புதிய படத்திற்கு கிடைத்த வரவேற்பு போன்று டிஜிட்டல் பாட்ஷாவிற்கும் வரவேற்பு கிடைத்துள்ளது. திரையுலக நட்சத்திரங்களையும் அதிகளவில் இப்படம் கவர்ந்துள்ளது.


டிஜிட்டல் பாட்ஷா பற்றி இயக்குநர் பாலாஜி மோகன் கூறியதாவது: "இது எனக்கு ஒரு உணர்ச்சிகரமான தருணம். பாட்ஷா படத்தை கடந்த 1995 ஆம் ஆண்டு என்னுடைய பெற்றோர்களுடன் இணைந்து பார்த்த போது எனக்கு வயது 8. தற்போது மீண்டும் அவர்களோடு இணைந்து இந்த டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மெருகேறி இருக்கும் பாட்ஷா படத்தை பார்க்கும்போது மெய் சிலிர்க்கிறது"


அனிரூத் கூறியதாவது: "நம் வாழ்க்கையில் இதுவரை எவரும் கண்டிராத திரையரங்க அனுபவத்தை நமக்கு தருகின்ற திரைப்படம் இந்த டிஜிட்டல் பாட்ஷா" என்று கூறியுள்ளார்.


தனுஷ் கூறியதாவது: "22 வருடங்களுக்கு முன் என்ன உற்சாகம் இருந்ததோ, அதே தான் இப்போதும் இருக்கின்றது. "நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான், கை விட மாட்டான்.. மீண்டும் ஒரு முறை தலைவரை காண இருக்கின்றோம்" என்றார்.


லதா ரஜினிகாந்த் கூறியதாவது: "இத்தனை வருடங்களுக்கு பிறகும் ரசிகர்களின் அதே அன்பை பார்க்கும் பொழுது எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது. இந்த டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மெருகேறி இருக்கும் பாட்ஷா திரைப்படம் என்னை மிகவும் கவர்ந்து விட்டது. ஜாக்கிச் சானின் படங்களுக்கு இருக்கும் வரவேற்பை விட இந்த டிஜிட்டல் பாட்ஷாவிற்கு வரவேற்பு அமோகமாக இருக்கின்றது" என்று கூறியுள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in