ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் தேவா இசையமைப்பில் ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன், விஜயகுமார் மற்றும் பலர் நடித்த 'பாட்ஷா' திரைப்படம் 1995ம் ஆண்டு ஜனவரி மாதம் 12ம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அந்தப் படத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு தரம் உயர்த்தி, ஒலியையும் 5.1 தொழில்நுட்பத்திற்கு மாற்றி இன்று தமிழ்நாடு முழுவதும் திரையிட்டுள்ளார்கள். சென்னை மற்றும் அதன் சுற்றுப் புறங்களில், இன்று வெளியாகியுள்ள புதிய படங்களை விட அதிகமாக சுமார் 40க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் 'பாட்ஷா' வெளியாகியுள்ளது.
மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் காலை காட்சியிலேயே 95 சதவீதத்திற்கும் அதிகமாக தியேட்டர்களில் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதாகத் தெரிவிக்கிறார்கள். ஒரு புதிய படம் வெளிவந்தால் எப்படி கொண்டாடுவார்களோ அப்படியே 22 வருடங்கள் கழித்து டிஜிட்டல் வடிவில் வந்துள்ள 'பாட்ஷா' படத்தைக் கொண்டாடி வருகிறார்கள் ரஜினி ரசிகர்கள்.
பல தியேட்டர்களில் ரஜினி ரசிகர்கள் படத்தில் ரஜினி அறிமுகமாகும் காட்சியை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவச் செய்துள்ளார்கள். அவற்றை ஆயிரக் கணக்காணோர் பார்த்து ரசித்துள்ளார்கள்.
இன்று காலையில் சென்னை, சத்யம் திரையரங்கில் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்தும், அவருடைய மகள் ஐஸ்வர்யா தனுஷும் ரசிகர்களுடன் அமர்ந்து படத்தைப் பார்த்துள்ளார்கள்.
ரஜினிகாந்தின் மருமகனும், நடிகருமான தனுஷ், “22 வருடங்கள் கழித்து...அதே உற்சாகம்..'பாட்ஷா'...நல்லவங்கள சோதிப்பான், கை விட மாட்டான்..., இதோ மறுபடியும்..தலைவா...” என டிவீட்டியுள்ளார்.
'பாட்ஷா' டிஜிட்டல் வடிவத்திற்குக் கிடைத்துள்ள வரவேற்பைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்து சூப்பர் ஹிட்டான மேலும் சில படங்களை டிஜிட்டல் வடிவில் மாற்றும் பணிகள் விரைவில் ஆரம்பமாகலாம்.