ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சேது, காசி, பிதாமகன், அந்நியன் என சில படங்களில் மாறுபட்ட கெட்டப்பில் நடித்தவர் விக்ரம். அதனால் தமிழ் சினிமாவில் கமலுக்கு அடுத்தபடியாக ரிஸ்க் எடுத்து நடிக்கக்கூடிய ஒரு நடிகர் என்கிற இமேஜ் அவருக்கு உருவானது. ஆனபோதும், சமீபகாலமாக விக்ரமின் திறமைக்கு தீனி போடக்கூடிய அழுத்தமான கதாபாத்திரங்கள் அவருக்கு அமையவில்லை. அதனால் இள வட்ட நடிகர்களின் பாணிக்கு திரும்பி விட்டார்.
அதாவது, தற்போது விஜயசந்தர் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் வட சென்னைவாசியாக நடித்து வரும் விக்ரம், அந்த படத்தில் ஆக்சன் ஹீரோவாக நடிக்கிறார். குறிப்பாக, ஏற்கனவே சரண் இயக்கத்தில் அவர் நடித்த ஜெமினி படம் போன்ற கெட்டப்பில் நடிக்கும் விக்ரமிற்கு குத்துப்பாடலும் உள்ளதாம். அதனால், ஜெமினி படத்தில் இடம்பெற்ற ஓ போடு பாடலைப்போன்று இந்த பாடல் இருந்தால் பெஸ்ட்டாக இருக்கும் என்று அப்படத்திற்கு இசையமைக்கும் தமனிடம் கூறியிருக்கிறாராம் விக்ரம்.