ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கதாநாயக நடிகர்களுக்குள் போட்டியும் பொறாமையும் மலிந்திருந்த கோடம்பாக்கத்தில், சக நடிகர்களுடன் நட்பாக இருக்க முடியும் என இளம் நடிகர்களுக்கு கற்றுக் கொடுத்தவர் ஆர்யாதான். சக ஹீரோக்களை மாமன், மச்சான் என்று அழைத்து இளம் நடிகர்கள் மத்தியில் நட்புப்பாலத்தை அமைத்தவர் ஆர்யாதான்.
சிசிஎல் என்கிற நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடக்கவும், நடிகர் சங்கத்தை பாண்டவர் அணி கைப்பற்றவும் அன்றைக்கு ஆர்யா போட்ட அடித்தளம்தான் காரணம். அதனாலோ என்னவோ ஆர்யாவுக்கு உதவ வேண்டும் என்றால் அத்தனை நடிகர்களும் ஓடோடி வருகிறார்கள். கடந்த சில வருடங்களாக ஆர்யா நடித்த படங்கள் சரியாகப் போகவில்லை. அதனால் தற்போது சற்றே பின்னடைவில் இருக்கிறார்.
தன்னுடைய மார்க்கெட்டை மீண்டும் பிடிக்கும் வகையில் தற்போது கடம்பன் என்ற படத்தில் நடித்து வருகிறார். 'மஞ்சப்பை' படத்தை இயக்கிய ராகவன் இப்படத்தை இயக்கி வருகிறார். ஆர்யாவுக்கு ஜோடியாக, கேத்ரின் தெரஸா நடித்துள்ள 'கடம்பன்' படத்தின் திரையரங்க டிரைலரை நடிகர்கள் சூர்யாவும், மாதவனும் இணைந்து வெளியிடவிருக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தின் டிரைலரை தங்களின் ட்விட்டர் பக்கத்தில் சூர்யாவும், மாதவனும் மார்ச் 2ஆம் தேதி மாலை 5 மணியளவில் வெளியிடவிருக்கிறார்கள்.