ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த படம் பாகுபலி. ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா உள்ளிட்ட பலரது நடிப்பில், சரித்திர படமாக வெளியான இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது இதன் இரண்டாம் பாகம் இன்னும் பிரமாண்டமாய் உருவாகி வருகிறது. ஒட்டுமொத்த இந்திய சினிமாவே இப்படத்தை ஆவலாய் எண்ணி காத்திருக்கிறது. இதனிடையே பாகுபலி-2 ரிலீஸால் தன் படத்தின் புரொமோஷனை கூட தள்ளி வைத்துவிட்டாராம் சல்மான், மேலும் அவரது படமும் கூட தள்ளிபோய்விட்டதாக கூறப்படுகிறது.
தற்போது சல்மான், கபீர்கான் இயக்கத்தில் ‛டியூப்லைட்' என்ற படத்தில் நடித்து வருகிறார். பொதுவாக பாலிவுட் நடிகர்கள், தங்களின் படம் ரிலீஸாவதற்கு இரண்டு-மூன்று மாதங்களுக்கு முன்பே புரொமோஷனை துவக்கி விடுவார்கள். ஆனால், சல்மான்கானோ, பாகுபலி படம் ரிலீஸான பிறகு தான், தன் படத்தின் புரொமோஷனையே ஆரம்பிக்க உள்ளாராம். என்னதான் தனது படத்தை சல்மான், பம்பரமாய் சுழன்று புரொமோஷன் செய்தாலும் பாகுபலி ரிலீஸ் பரபரப்பில் எல்லாமே அமுங்கிவிடும் என்பதால் பாகுபலி ரிலீஸான பிறகு தனது படத்தின் புரொமோஷனை ஆரம்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஜூன் மாதம் ரிலீஸாக இருந்த டியூப்லைட் படம், ஒருமாதம் தள்ளி ரம்ஜான் திருநாளில் ரிலீஸாக உள்ளதாக கூறப்படுகிறது.