ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டின் பிரபல நடிகையான கரீனா கபூருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. மகனுக்கு தைமூர் அலிகான் என்று பெயர் வைத்துள்ளார். இப்பெயர் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, சிலர் எதிர்ப்பும் தெரிவித்தனர். ஆனால் இதைப்பற்றி கரீனா-சைப் தம்பதியர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்நிலையில் தனது மகனுக்கு செல்லப்பெயர் ஒன்றை சூட்டியிருக்கிறார் கரீனா. தைமூரை அவர் செல்லமாக ‛லிட்டில் ஜான் என்று தான் அழைத்து வருகிறாராம். கரீனா மட்டுமல்ல அவரது நண்பர்களும் தைமூரை, லிட்டில் ஜான் என்றே அழைத்து வருகிறார்களாம். கரீனா, அடுத்தப்படியாக ‛வீரே தி வெட்டிங் என்ற படத்தில் நடிக்க உள்ளார். விரைவில் இப்படம் ஆரம்பமாக உள்ளது.