சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
கெளதம்கார்த்திக், நெப்போலியன், பிரியாஆனந்த் உள்பட பலர் நடித்துள்ள படம் முத்துராமலிங்கம். இளையராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை ராஜதுரை இயக்கியுள்ளார். குளோபல் மீடியா ஒர்க்ஸ் என்ற நிறுவனம் தயாரித்திருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று இந்த படம் திரைக்கு வந்தது. இந்த நிலையில், முத்துராமலிங்கம் படத்தை திரையிடுவதற்கு உயர்நீதிமன்றம் நேற்று தடை விதித்துள்ளது.
காரணம், முத்துராமலிங்கம் படத்தை தயாரித்த விஜய் பிரகாஷ் என்பவர், எம்.வி.பிரகாஷ் என்பவரிடத்தில் கடனாக ரூ. 29 லட்சம் வாங்கியிருந்தாராம். அதை முத்துராமலிங்கம் படத்தை வெளியிடுவதற்கு முன்பு தருவதாகவும் கூறியிருந்தாராம். ஆனால் வாங்கிய கடனை திருப்பிக்கொடுக்காமல் படத்தை ரிலீஸ் செய்த விட்டாராம் விஜய் பிரகாஷ். இதையடுத்து எம்.வி.பிரகாஷ் அளித்த புகாரின் பேரில், ரூ. 29 லட்சம் கடனை திருப்பி கொடுக்கும்வரை முத்துராமலிங்கம் படத்தை திரையிடக்கூடாது என்று உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. இதன்காரணமாக முத்துராமலிங்கம் படக்காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.