ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமுத்திரகனி இயக்கிய உன்னைச்சரணடைந்தேன் படத்தில் ஹீரோவாக நடித்தவர் வெங்கட்பிரபு. அந்த படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறாததால் தனது நட்பு வட்டார நடிகர்களை வைத்து சென்னை-28 என்ற பெயரில் ஜாலியான ஒரு விளையாட்டுப் படத்தை எடுத்தார். ஆனால் அந்த படம் சூப்பர் ஹிட்டானது. அதனால் முதல் படத்திலேயே வெற்றி இயக்குனரான வெங்கட்பிரபு பின்னர் அஜித்தை வைத்து மங்காத்தா படத்தை இயக்கி முன்னணி இயக்குனரானார்.
என்றாலும், அதன்பிறகு அவர் இயக்கிய பிரியாணி, மாசு போன்ற படங்கள் தோல்வியடைந்து அவரை சறுக்கி விட்டன. அதையடுத்து மறுபடியும் சென்னை-28 படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி மீண்டும் வெற்றிப்பட இயக்குனராகி விட்டார். இந்த நிலையில், அடுத்தபடியாக அவருக்கு ரஜினியை இயக்க வேண்டும் என்ற ஆசையும் ஏற்பட்டுள்ளதாம். ஆனால் அஜித்தின் மங்காத்தா போன்று ஆக்சனாக இல்லாமல் ரஜினியை வைத்து காமெடி படம் பண்ண ஆசைப்படுகிறாராம் வெங்கட்பிரபு.