Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அப்பாவின் கனவை நிறைவேற்ற இயக்குனரானேன் : காயத்ரி ரகுராம்

28 பிப், 2017 - 14:18 IST
எழுத்தின் அளவு:
I-turn-as-director-for-full-my-fathers-dream-says-Gayathiri-Raguram

பிரபல நடன இயக்குனர் ரகுராமின் மகள் காயத்ரி ரகுராம். நடிகையாக சினிமாவில் அறிமுகமான காயத்ரி. சார்லி சாப்ளின், விசில், ஸ்டைல், வானம் உள்பட பல படங்களில் நடித்தார். பின்னர் திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலானார். அதன்பிறகு கணவரை விவாகரத்து செய்து விட்டு மீண்டும் சினிமாவுக்கு நடன இயக்குனராக திரும்பினார். தற்போது முன்னணி நடன இயக்குனராக இருக்கிறார். அவர் இயக்குனராகி யாதுமாகி நின்றாய் என்ற படத்தை இயக்கி உள்ளார்.


இது குறித்து காயத்ரி ரகுராம் கூறியதாவது: நான் சினிமாவுக்கு வந்து 15 வருடங்களாகிறது. குழந்தை நட்சத்திரமாக, ஹீரோயினாக, நடன கலைஞராக, நடன இயக்குனராக எனது சினிமா பயணம் அமைந்தது. 1980களில் சினிமாவில் நடனமாடும் கலைஞர்களின் வாழ்க்கை மிக கடுமையாக இருந்திருக்கிறது. அவற்றில் சிலவற்றை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். சிலவற்றை பார்த்திருக்கிறேன். அதை சினிமாவாக எடுக்க வேண்டும் என்ற நிஜ சம்பவங்களை கோர்த்து ஸ்கிரிப்ட் எழுதினேன். இதை நல்ல இயக்குனரை கொண்டு படமாக்க நினைத்திருந்தேன். அப்பா "நீ எழுதின கதையை நீயே இயக்கு" என்று என்னை ஒரு இயக்குராக்கி பார்க்க ஆசைப்பட்டார். அவர் இப்போது இல்லை என்றாலும் அவரது ஆசியுடன் எனது சித்தி கலா மாஸ்டரின் வழிகாட்டுதலுடனும் இந்தப் படத்தை நான் இயக்கி இருக்கிறேன்.


இது பக்கா கமர்ஷியல் படம்தான். ஆனால் விருதுகளும் கிடைக்கும். நடன கலைஞர்களின் வாழ்க்கையை இதுவரை யாரும் சினிமாவாக எடுத்ததில்லை. நான் எடுத்து அந்த கலைஞர்களுக்கே அதனை சமர்பிக்கிறேன். பள்ளிப் பருவம் முதல் முதுமை பருவம் வரையிலான வாழ்க்கையை ஒரு நடன மங்கை எப்படி கடந்து வருகிறாள் என்பதுதான் கதை. என்றார் காயத்திரி ரகுராம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in