ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
யட்சன் படத்திற்கு பிறகு யாக்கை, விழித்திரு, கிரகணம், பண்டிகை, வீரா, களறி என பல படங்களில் நடித்து வருகிறார் கிருஷ்ணா. இதற்கு முன்பு பெரும் பாலும் காதலை பிரதானமாக கொண்ட கதைகளிலேயே அதிகமாக நடித்து வந்துள்ள கிருஷ்ணா, புதிய படங்களில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட கதைகளில் நடித்து வருகிறார். இந்த படங்கள் திரைக்கு வரும்போது கிருஷ்ணாவை மாறுபட்ட நடிகராக நிறுத்தும் என்கிறார்கள்.
அப்படி அவர் நடித்துள்ள படங்களில் நடிகை விஜயலட்சுமி தயாரிப்பில் அவரது கணவர் பெரோஸ் இயக்கியுள்ள படம் பண்டிகை. தாதா சம்பந்தப்பட்ட கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிரடி சண்டை காட்சிகளில் நடித்துள்ளார் கிருஷ்ணா. நிழல் உலக தாதாவுடன் மோதும் ஒரு சண்டை காட்சியில் மட்டும் ஒரு வாரத்திற்கு மேலாக நடித்திருக்கிறாராம். அதனால் கிருஷ்ணாவின் இந்த பண்டிகை படம் ஆக்சன் பிரியர்களுக்கு நல்ல தீனியாக இருக்கும் என்கிறார்கள்.