ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
சலீம் படத்தில் விஜய் ஆண்டனியின் நண்பராக நடித்தவர் லொள்ளுசபா சாமிநாதன். அதையடுத்து, நேற்று விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகியுள்ள எமன் படத்திலும் அவரது நண்பராக நடித்துள்ளார். அதோடு, பெரும்பாலும் காமெடியனாகவே நடித்து வந்துள்ள அவர், சலீம், எமன் படங்களில் குணசித்ர வேடத்தில் நடித்திருக்கிறார்.
இதுபற்றி சாமிநாதன் கூறுகையில், நான் காமெடியனாக நடித்த படங்களைப்பார்த்து விட்டு அந்த கேரக்டர்களின் பெயரை சொல்லித்தான் என்னை அழைப்பார்கள். பெரும்பாலும் பாவாடை சாமி என்றும் சொல்வார்கள். ஆனால் சலீம் படத்தில் என்னை குணசித்ர வேடத்தில் பார்த்து விட்டு, பலரும் பாராட்டியதோடு, இனிமேல் இந்த மாதிரி வேடங்களில் நடித்து அடுத்த லெவலுக்கு செல்லுங்கள் என்றும் கூறிவந்தனர்.
இந்த நேரத்தில்தான், எமன் படத்தில் நான்தான் விஜய் ஆண்டனியின் நண்ப ராக நடிக்க வேண்டும் என்று அவரது மனைவி பாத்திமா மேடமே சொல்லியிருக்கிறார்கள். என்னிடம்கூட ஒருமுறை, என் ஹஸ்பண்டுக்கு சரியான செட்டு நீங்கதான் என்று சொன்னார்கள். அதோடு, எமன் படத்தின் இயக்குனர் ஜீவா சங்கர் படம் முழுக்க நீங்கள் வருகிறீர்கள் என்றார். அதேபோல் நிறைய காட்சிகள் கொடுத்துள்ளார். நான் சில படங்களில் நடிக்க அவ்வப்போது சென்று விட்டபோதும் எனக்கு நிறைய காட்சிகள் கொடுத்துள்ளார். நல்ல அருமையான டைரக்டர்.
இப்போது எமன் படத்தில் அவர் நான் நடித்துள்ள குணசித்ர வேடத்தைப்பார்த்து விட்டு பலரும் பாராட்டுகிறார்கள். காமெடியனாக நடித்ததை விட குணசித்திர வேடத்தில் நடித்தது மனதில் நிற்கிறது என்கிறார்கள். இப்படி ரசிகர்கள் பாராட்டுவது மனதுக்கு நிறைவாக உள்ளது. அதனால் இனிமேல் காமெடியை விட குணசித்ர வேடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்போகிறேன் என்கிறார் லொள்ளுசபா சாமிநாதன்.