சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
தனுஷ் இயக்கி வரும் முதல்படமான ‛பவர்பாண்டி' படத்தின் ஆடியோ வருகிற மார்ச் 9ம் தேதி ரிலீஸாகிறது. நடிகர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட தனுஷ், ‛பவர்பாண்டி' படத்தின் மூலம் இயக்குநராகவும் களமிறங்கினார். இப்படத்தில் ராஜ்கிரண், பிரசன்னா, நதியா, சாயாசிங் மற்றும் பலர் நடிக்கிறார்கள். ஜோக்கர் படத்திற்கு இசையமைத்த ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் 7ம் தேதியன்று சென்னையில் ஆரம்பமானது. தன்னுடைய நடிப்பு வேலைகளுக்கு இடையிலும், இடைவிடாமல் படப்பிடிப்பு ஒருவழியாக நடத்தி முடித்துவிட்டார் தனுஷ். இன்னும் ஒரே ஒருநாள் மட்டும் தான் படப்பிடிப்பு பாக்கியிருக்கிறது, இன்று(பிப்.23-ம் தேதி) முதல் டப்பிங் பணிகள் துவங்கியிருக்கிறது என்று டுவீட் செய்துள்ளார் தனுஷ். அதுமட்டுமல்ல ஷான் ரோல்டனின் இசையில் உருவாகியுள்ள ‛பவர்பாண்டி' படத்தின் இசை வெளியீடு, மார்ச் 9ம் தேதி வெளியாகும் என்று தனுஷ் அறிவித்திருக்கிறார்.