Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகைகள் பாதுகாப்பிற்கு தனி குழு அமைக்கிறது நடிகர் சங்கம்

24 பிப், 2017 - 10:20 IST
எழுத்தின் அளவு:
Nadigar-Sangam-to-form-separate-team-for-actress-safety

நடிகை பாவனா கேரளாவில் ஒரு கும்பலால் காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார். இது தென்னிந்திய சினிமாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிகழ்வுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தை சேர்ந்த சினிமா மற்றும் நாடக நடிகைகளின் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க இருக்கிறது.


இது தொடர்பாக நடிகர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: சமீப காலங்களில் பெண்கள் சம்மந்தப்பட்ட எல்லா துறைகளிலும் கிராமம், நகரம் மற்றும் படித்தவர்கள், படிக்காதவர்கள் பேதமின்றி பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை நடந்தேறி வருவது வேதனையளிப்பதாக இருக்கிறது. இதுபற்றிய தகவல்களை ஊடகங்கள் மற்றும் சமூக அமைப்புகள் வெளிப்படுத்தி போராடி வருகின்றன. அதில் சம்மந்தப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்று தர அரசுக்கும் காவல்துறைக்கும் அவர்கள் அழுத்தம் கொடுத்தும் வருகின்றன.


இந்நேரத்தில் அனைத்து திரைத்துறை கலைஞர்களுக்கும் ஒரு வேண்டுகோளை வைக்கிறோம். உங்களுக்கு பல லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கென தனி அமைப்பை ஏற்படுத்தி பல நலத்திட்டங்களை செய்தும் வருகிறீர்கள். அத்துடன் பெண்களுக்கு சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுப்பதையும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதையும் முன்னுரிமை கொடுத்து சமூக செயலாற்ற உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.


சமீபத்தில் பாவனாவுக்கு நேர்ந்த பாலியல் கொடுமையை ஒரு நடிகை என்று மட்டும் பார்க்காமல் பெண் இனத்திற்கான ஒரு கொடுமையாகவே கருதுகிறோம். இந்த நேரத்தில் எங்கள் உறுப்பினர் வரலட்சுமி இதுபோன்று தனக்கேற்பட்ட தனிப்பட்ட அனுபவத்தை மனகசப்புடன் டிவிட்டரில் பகிர்ந்து கொண்டிருந்தார். அதை கண்டு நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். இதை சட்டப்படியும் தார்மீக ரீதியாகவும் அவர்களுடன் இணைந்து குரல் கொடுக்க நாங்கள் முடிவெடுத்திருக்கிறோம்.


திரைத்துறையில் இயங்கி வரும் பெண்கள், நாடக துறையில் உள்ள பெண்கள், தொழில் பாதுகாப்பையும், உளவியல் ரீதியான பாதுகாப்பையும் காப்பாற்ற தனிப்பட்ட கவனம் செலுத்த தனிக்குழுக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோரை நியமிப்பதை குறித்து வருகின்ற செயற்குழுவில் விவாதித்து முடிவெடுக்கப்படும். இதுபோன்ற சமூக விழிப்புணர்வுகளுக்கு போராடும் ஊடகங்கள் மற்றும் சமூக அமைப்புகள் அனைத்திற்கும் எப்போதுமே எங்களுடைய ஆதாரவு உண்டு. அவர்களுடன் சமூக மாற்றத்திற்கு இணைந்து செயல்பட நாங்கள் காத்திருக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement
217வது நாளில் 'கபாலி' - தியேட்டர் ஓனர் விளக்கம்217வது நாளில் 'கபாலி' - தியேட்டர் ... அரவிந்தசாமி படத்தில் 5 ஹீரோயின் அரவிந்தசாமி படத்தில் 5 ஹீரோயின்


வாசகர் கருத்து (3)

Kannan Saminathan - grigny,பிரான்ஸ்
25 பிப், 2017 - 10:34 Report Abuse
Kannan Saminathan நடிகைகள் காசுக்காக எல்லாத்தையும் காட்டி இளைஞர்களை மயக்கி காசு பார்த்தவலுக்கெல்லாம் பாத்து காப்பு கொடுக்க முடியாது இவர்களை யார் எல்லாத்தையும் அவுத்து காட்டி விட்டு பிறகு எனக்கு பாத்து காப்பு வேணும்னா கிடைக்காது காசுதான் கிடைக்கும் அந்த காச வச்சி தனியாக பாத்து காப்பு வைத்து கொள்ள வேண்டியதுதான் அந்தரங்க பகுதிகளை காண்பித்து காசு பார்க்க வேண்டியது பிறகு பாதுகாப்பு என்றால் நடக்காத காரியம் நடிகைகளே
Rate this:
Dol Tappi Maa - NRI,இந்தியா
25 பிப், 2017 - 03:07 Report Abuse
Dol Tappi Maa போட்டோவை பார்த்தால் இது தமிழ்நாடா இல்ல கேரளாவா என்று தெரியவில்லை
Rate this:
Shanu - Mumbai,இந்தியா
24 பிப், 2017 - 13:56 Report Abuse
Shanu ராத்திரி ஒரு மணிக்கு மேல் அரை குறை ட்ரெஸ்ஸில் தண்ணி அடித்து கும்மாளம் போடுவதை இந்த நடிகைகள் நிறுத்த வேண்டும். துவக்கத்தில் பட வாய்ப்புக்காக தன்னையும் இழக்க தயங்குவது இல்லை. பின்னர், இந்த தயாரிப்பாளர் தொட்டார், நடிகர் தொட்டார், , இயக்குனர் தொட்டார், etc என்று சொல்வார்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Karu
  • கரு
  • நடிகை : சாய் பல்லவி
  • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
  Tamil New Film Pariyerum perumal
  Tamil New Film Kaala
  • காலா
  • நடிகர் : ரஜினிகாந்த்
  • நடிகை : ஹூயூமா குரேஷி
  • இயக்குனர் :பா.ரஞ்சித்
  Tamil New Film JagaJaala Killaaddi
  • ஜகஜால கில்லாடி
  • நடிகர் : விஷ்ணு விஷால்
  • நடிகை : நிவேதா பெத்ராஜ்
  • இயக்குனர் :எழில்

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in