ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இயக்குநர் செல்வா இயக்கத்தில் “ அரவிந்த் சாமி “ - “ ரித்திகா சிங் “ நடிக்கும் திரைப்படத்தில் நடிகை சிம்ரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
மேஜிக் பாக்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கணேஷ் தயாரித்து பிரபல இயக்குநர் செல்வா இயக்கும் திரைப்படம் “ மேஜிக் பாக்ஸ் ப்ரொடக்ஷன் நம்பர் 3 “ .அரவிந்த் சாமி கதாநாயகனாகவும் , ரித்திகா சிங் கதாநாயகியாகவும் நடிக்கும் இத்திரைப்படம் சென்ற வாரம் பூஜையுடன் துவங்கியது. இப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை சிம்ரன் போலிஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் மற்றும்மொரு கதாநாயகியாக நந்திதா நடிக்கிறார். மிக முக்கியமான கதாபாத்திரத்தில் தம்பி ராமையா , சாந்தினி , ஹாசினி , ஹரிஷ் உத்தமன் , ராஜ் கபூர் , நாகி நீடு , ரமேஷ் பண்டிட் ஓ.ஏ.கே. சுந்தர் ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தில் எக்கச்சக்க புகழ் பெற்ற நடிகர் நடிகை நடிப்பத்தால் படத்தின் வியாபாரம் இப்போதில் இருந்தே சூடுபிடித்துள்ளது. இப்படத்தின் தலைப்பு “ வணங்காமுடி “ என அனைவரும் கூறி வருகின்றனர் அது தவறான தகவலாகும். பெயரிடப்படாத இப்படத்தின் தலைப்பு பற்றிய அறிவிப்பு தயாரிப்பு தரப்பில் இருந்து மிக விரைவில் வெளிவரும்.
இப்படத்துக்கு கோகுல் ஒளிப்பதிவு செய்ய, டி. இமான் இசையமைக்கிறார். படத்தொகுப்பு ஆண்டனி , கலை சிவா யாதவ்.