ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஒரு கல் ஒரு கண்ணாடியில் நாயகனாக அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். அதையடுத்து பல படங்களில் நடித்த அவர், தற்போது பொதுவாக என் மனசு தங்கம், சரவணன் இருக்க பயமேன், இப்படை வெல்லும் என மூன்று படங்களில் நடித்து வருகிறார். இதில் பொதுவாக என் மனசு தங்கம் படத்தில் பார்த்திபன் அரசியல் தாதாவாக நடிக்க, அவருடன் மோதும் வேடத்தில் நடிக்கிறார் உதயநிதி. அதோடு, தேர்தலில் போட்டியிட்டு பார்த்திபனை தோற்கடிக்கிறாராம்.
அந்த படத்தின் படப்பிடிப்பு தேனி பகுதியில் நடைபெற்றபோது, மீடியாக்களுக்கு பேட்டிளித்த உதயநிதியிடம் அரசியல் குறித்து கேள்வி கேட்டபோது, எனக்கு அரசியல் ஆர்வம் இல்லை என்று தெரிவித்திருந்தார். ஆனால் சட்டசபையில் நடைபெற்ற ஜனநாயக படுகொலையை கண்டித்து சென்னையிலுள்ள ஆலந்தூரில் திமுகவினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தில் உதயநிதி ஸ்டாலினும் கலந்து கொண்டார். அப்போது மேடையில் தலைவர் தோரணையில் முன்வரிசையில் அமர்ந்திருந்தார் உதயநிதி.