ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கேரளாவில், நடிகை பாவனாவை கடத்தி, பாலியல் ரீதியாக துன்புறுத்தியது திரையுலகினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நடிகைக்கே பாதுகாப்பு இல்லாத போது சாதாரண மக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும் என்று திரையுலகினர் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் கேரள முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
பின்னர் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சங்க துணை தலைவர் பொன் வண்ணன்... ‛‛சமீபத்தில் பாவனாவிற்கு நடந்த சம்பவம் குறித்து அனைவரும் கேள்விப்பட்டு இருப்பீர்கள். உண்மையில் எங்களுக்கு இது மிகவும் வருத்தமான மிகவும் சங்கடமான விஷயமாகும். அவருக்கு நடந்ததற்காக மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த பெண் இனம் இன்று எந்த அளவிற்கு ஒரு மனிதாபிமானமற்ற ஆண்களின் கையில் தவறாக பயன்படுகிறது என்று எண்ணும் போது மிகவும் வருத்தமாக உள்ளது. இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டி கேரளா முதல்வருக்கும், காவல்துறைக்கும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் தொலை நகல் ஒன்றை அனுப்பியுள்ளோம். அதில் இந்த சம்பவத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காணவேண்டும் என்று வலியுறுதிருந்தோம்.
எங்களின் வேண்டுகோள் அந்த பெண்ணை கடத்தியது யாராக இருந்தாலும் சரி, சமூகத்தில் உயர்ந்த பொறுப்பில் இருந்தாலும் பாரபட்சம் இல்லாமல் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை. இந்த சம்பவத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கதின் சார்பில் மிக பெயரிய அளவில் கண்டனத்தை தெரிவித்துகொள்கிறோம்.
பின்பு ஒட்டுமொத்த பெண்களுக்கும் நாங்கள் வைக்கும் வேண்டுகோள் என்னவென்றால், இன்று தங்களை பாதுகாத்துக் கொள்ள தொழில்நுட்பங்கள் அதிகமாக உள்ளது. மேலும் நாம் பயணம் செய்யும் போது நமது பாதுகாப்பை நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். நடிகர், நடிகைகள் படபிடிப்பு முடிந்து திரும்பும் போது அதிக நேரம் பயணம் செய்யவேண்டிய சூழ்நிலை உள்ளது. டிரைவரின் உதவியுடன் தான் நாம் அனைவரும் பாதுகாப்பாக பயணம் முடியும். ஒரு பயணத்திற்கு நாம் காரை வாடகைக்கு வாங்கும் போது அந்த டிரைவரின் அனைத்து பின்னணியும் அறிந்து கொள்ளவேண்டும். முடிந்தளவு பெண்கள் இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும். பெரியவர்கள் இந்த பாதுகாப்பு சூழ்நிலையை அறிந்து கொண்டு செயல்பட முடியும் ஆனால் அதே சமயத்தில் சிறிய குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில்??
சமீபத்தில் எண்ணூரில் ஒரு குழந்தையை பலாத்க்காரம் செய்து கொலை செய்துள்ளனர் என்ற செய்தி வந்தது. நாம் எண்ணி பார்க்கவேண்டிய விஷயம் நாம் வெறும் 30% மட்டும் படிப்பறிவு கொண்டு இருந்த போது இருந்த பெண்களுக்கான பாதுகாப்பு இன்று 80% படிப்பறிவு கொண்டு இருக்கும் போது இல்லை என்று எண்ணும் போது வருத்தமாக உள்ளது. ஆனால் அதேசமயம் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த போது இளம் பெண்களும், இளைஞர்களும் இரவோடு இரவாக அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டதை நாம் பார்த்தோம். இப்படிப்பட்ட இரண்டு வகையில் நம் சமுகம் செயல்படுகிறது. இதற்கு காவல்துறை மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.