Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒரே நேரத்தில் மூன்று படங்களில் விக்ரம்

20 பிப், 2017 - 17:17 IST
எழுத்தின் அளவு:
Vikram-in-three-films-at-a-time

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் 'துருவநட்சத்திரம்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் நடந்து முடிந்தது. சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் தாடியுடன் இருந்த விக்ரம், அடுத்து விஜய் சந்தர் இயக்கும் படத்தில் நடிப்பதற்காக தன்னுடைய தாடியை மழித்துவிட்டு, வழக்கமான கருப்புநிற தலைமுடியுடன் காணப்பட்டார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் தமன்னா முதன் முதலாக விக்ரமுடன் இணைந்து நடிக்கிறார். ஆர்.கே.சுரேஷ் வில்லனாக நடிக்கிறார்.


இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதும், கௌதம் மேனன் இயக்கும் துருவ நட்சத்திரம் படத்திலிருந்து விக்ரம் விலகிவிட்டார் என்று தொடங்கி நிறைய செய்திகள் வெளியாகின. இந்நிலையில் துருவ நட்சத்திரம் படத்தின் தற்போதைய நிலை குறித்து புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. விஜய்சந்தர் இயக்கும் படத்தின் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு முடிந்ததும் விக்ரம் அடுத்து கௌதம் மேனன் இயக்கும் 'துருவநட்சத்திரம்' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார்.


'துருவநட்சத்திரம்' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இம்மாதம் 25-ஆம் தேதி துவங்கவிருக்கிறது. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக யார் நடிக்க இருக்கிறார்கள் என்ற சஸ்பெனஸ் நீடித்தது. 'பெல்லி சூப்பலு' தெலுங்கு படத்தில் நடித்த ரீதுவர்மாவை கதாநாயகியாக நடிக்க வைத்திருக்கிறார்.


கடந்த சில ஆண்டுகளாக ஒரு படத்தில் நடித்து முடித்த பிறகே அடுத்த படத்திற்கு நடிக்கச் செல்லும் வழக்கத்தை கடைபிடித்துவிந்தார் விக்ரம். இப்போது ஒரே நேரத்தில் மூன்று படங்களை கையில் வைத்துக் கொண்டு அதில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். மூன்றாவது படமான ஹரியின் 'சாமி-2'வின் படப்பிடிப்பும் மே மாதம் துவங்கும் என்று கூறப்படுகிறது!


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in