ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சுதிர் புதோடா என்ற வர்த்தக நிறுவனத்தின் சினிமா தயாரிப்பு நிறுவனமா ராமா ரீல்ஸ் தயாரிக்கும் படம் கடைசி பென்ஞ் கார்த்திக். பரத், பாலிவுட் நடிகை ருஹானி சர்மா நடிக்கிறார்கள். இவர்களுடன் அங்கனா ராய், ரவிமரியா, ஞானசம்பந்தன், சனா, சுரேகா, வாணி உள்பட பலர் நடிக்கிறார்கள். முஜிர் மாலிக் ஒளிப்பதிவு செய்கிறார். அன்பு ராஜேஷ் இசை அமைக்கிறார். ஒரு காதல் செய்வீர், திரு ரங்கா படங்களை இயக்கிய ரவி பார்கவன் இயக்குகிறார். இந்தப் படத்திற்கு தணிக்கை குழு யூ சான்றிதழ் கொடுத்திருக்கிறது. அது பற்றி இயக்குனர் அளித்த விளக்கம் வருமாறு:
இளமையான காதல் கதைதான் இந்தப் படம். அழகு தமிழில் காதல் என்ற வார்த்தையை உச்சரிக்கப்பட்ட போது காதல் மீது மரியாதையும், கௌரவமும் இருந்தது. அந்நிய மொழியான ஆங்கிலத்தில் லவ் என்று உச்சரித்த போது மரியாதையும், கௌரவமும் காணாமல் போய் காதல் மரியாதையை இழந்து விட்டது. அசிங்கப்படுத்தப்பட்டு விட்டது. இதை தான் கடைசி பெஞ்ச் கார்த்தி படத்தில் பதிவு செய்துள்ளேன்.பரத் கல்லூரி மாணவராக இதில் பொருந்திப் போய் இருக்கிறார். இளமையான படம் என்று சொல்கிற மாதிரி படம் இருக்கும் என்றார் இயக்குனர்.
படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் கொடுத்திருக்கிறது. ஆபாசமான காட்சியோ, வசனமோ படத்தில் கிடையாது. படத்தின் கதை அப்படி. தியேட்டருக்கு வந்து படம் பார்க்கிற இளைய தலைமுறை ரசிகர்களுக்கு ரொம்ப பிடிக்கும். பக்கா கர்ஷியல் காலேஜ் படமாக “ கடைசி பெஞ்ச் கார்த்தி “ இருக்கும் . படம் மார்ச் மாதம் வெளியாகிறது என்றார் ரவிபார்கவன்.