14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
இயக்குனரின் ஹரியின் உதவியாளர் யோகேந்திரன் மகேஷ் இயக்குனராகி இருக்கிறார். அவர் இயக்கும் படத்தின் தலைப்பு இடி மின்னல் புயல் காதல். பன்றி குட்டியை மையமாக வைத்து ஜெட்லி படத்தை தயாரித்து வரும் சிவாஜி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது. திராவிடன் என்ற புதுமுகம் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயின் உள்ளிட்ட நடிகர் நடிகைள் தேர்வு நடந்து வருகிறது. துலீப் குமார் ஒளிப்பதிவு செய்ய, சி.சத்யா இசை அமைக்கிறார்.
காதலுக்குள் இடி, மின்னல், புயல் எல்லாமே இருக்கிறது. அப்படி இருந்தால் தான் காதல். பூமியில் நிகழும் இடி மின்னல் புயல் எல்லாமே அபாயகரமானது தான் ஆனால் இது நிகழ்வது பூமியின் நன்மைக்காகத்தான். இவை இல்லாவிட்டால் பூமியின் இயக்கம் இருக்காது. அதுபோல காதலுக்குள் ஊடல், கூடல், இன்பம், துன்பம் எல்லாமே இருக்கும், இருக்க வேண்டும். அதனை எப்படி கையாள்கிறோம் என்பதில்தான் காதலின் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படுகிறது. அதைப் பற்றி பேசுகிற படம். படப்பிடிப்புகள் நாகர்கோவிலில் தொடங்கி கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலும் படமாகிறது என்கிறார் இயக்குனர் யோகேந்திரன் மகேஷ்.