ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தற்போது ராஜ்கிரண் நாயகனாக நடிக்கும் பவர்பாண்டி படத்தை இயக்கி வரும் தனுஷ், செளந்தர்யா ரஜினி இயக்கும் வேலையில்லா பட்டதாரி-2 படத்திலும் நடித்து வருகிறார். அதையடுத்து அவர் நடித்து பாதியில் நின்று கொண்டிருக்கும் என்னை நோக்கி பாயும் தோட்டா, வடசென்னை படங்களில் நடிக்கிறார். இந்த படங்களை முடித்ததும் அவர் ஏற்கனவே கமிட்டான ஹாலிவுட் படத்தில் நடிக்க யிருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் பகிர் என்ற ஹாலிவுட் படத்தில் பிரெஞ்ச் இயக்குனர் மர்ஜான் சத்ராபி இயக்கத்தில் தனுஷ் நடிப்பதாக செய்தி வெளியானது. ஆனால் பின்னர் தயாரிப்புத்தரப்புக்கும், இயக்குனர் மர்ஜான் சத்ராபிக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அப்படம் எப்போது தொடங்கம் என்பது கேள்விக்குறியாக இருந்து வந்தது. இந்த நிலையில், தற்போது அந்த படத்தில் இருந்து இயக்குனர் மர்ஜான் சத்ராபி விலகிவிட்டாராம். அதனால் அவருக்குப்பதிலாக படத்தை கனடா இயக்குனர் கென் ஸ்காட் என்பவர் இயக்குகிறாராம்.
மேலும், இயக்குனர் மர்ஜான் சத்ராபி அப்படத்தில் இருந்து விலகியதால் உமா தர்மன் என்ற நடிகரும் விலகி விட்டாராம். அதனால் இப்போது அவருக்குப்பதிலாக பெரனீஸ் பெஜோ நடிக்கிறாராம். இவரும் தனுசும்தான் தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் பகிர் படத்தில் முக்கியமான ரோலில் நடிக்கிறார்களாம். இப்படம் இன்னும் சில மாதங்களில் தொடங்கி விடும் என்கிறார்கள்.