ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
திமுக.,விலிருந்து அதிமுக.,விற்கு சென்ற ராதாரவி, மீண்டும் திமுக.,வில் நாளை இணைய உள்ளார். ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என பல்வேறு ரோல்களில் நடித்தவர் ராதாரவி. இவர் திமுகவில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். பின்னர் ஒருக்கட்டத்தில் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். எம்எல்ஏ.,வாக பதவி வகித்தார். ஆனால் தற்போது அதிமுக., கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் திமுக., கட்சிக்கு செல்ல முடிவு எடுத்துள்ளார்.
சமீபத்தில் நடிகர் வாகை சந்திரசேகரின் மகள் இல்ல திருமண விழா பழநியில் நடந்தது. இதில் திமுக., செயல் தலைவர் ஸ்டாலினும் கலந்து கொண்டார். அந்த திருமண விழாவில் பேசிய ராதாரவி, எனது சித்தப்பா தி.மு.க., தலைவர் கருணாநிதி நாம் ஒரேகுடும்பம், இங்குதான் நீங்கள் எல்லோரும் இருக்க வேண்டும் என சொல்வார். அதனை மறக்கவில்லை. தக்க தருணத்தில் தி.மு.க.,வின் செயல் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். ஜல்லிக்கட்டிற்கு அவர் எடுத்த முயற்சியை பாராட்டவேண்டும், விரைவில் உங்களுடன் சேருவேன் என்றார்.
இந்நிலையில் நேற்று ஒரு பட வெளியீட்டில் பங்கேற்ற ராதாரவியிடம் இதுப்பற்றி கேட்டபோது, இரண்டு அதிமுக.,வில் இருந்து எனக்கு பழக்கமில்லை, எனவே மீண்டும் திமுக.,வில் இணைகிறேன். நாளை திமுக., தலைவவைர சந்திக்கிறேன். இது விமரிசையாக நடக்கும் என்று கூறியுள்ளார்.