ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஆரம்பத்தில் வெற்றிப்பட ஹீரோவாக இருந்த ஜி.வி.பிரகாஷ்குமார், அதன் பிறகு தொடர்ந்து தோல்விப்படங்களையே கொடுத்து வருகிறார். பென்சில், எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு என அவர் நடித்த மூன்று படங்கள் வரிசையாக வசூல் ரீதியாக வெற்றிபெறாமல் தோல்வியடைந்தன. இந்த இக்கட்டானநிலையில், தனது அடுத்த படமாக ரிலீஸாக உள்ள 'புரூஸ் லீ' படத்தை ரொம்பவே நம்பியிருக்கிறார்.
இயக்குனர் பாண்டிராஜின் உதவியாளர் பிரசாந்த் பாண்டியராஜ் என்ற புதுமுக இயக்குநர் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமாரே இசையமைத்துள்ளார். அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை கீர்த்தி கர்பந்தா நடித்துள்ளார். இந்தப்படத்தில் மொட்டை ராஜேந்திரன் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்துள்ளார். 'கெனன்யா ஃபிலிம்ஸ்' நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
'புரூஸ்லீ' ரிலீஸுக்குத் தயாராக உள்ள நிலையில் விநியோகஸ்தர்களுக்கு பெரும்தொகை செட்டில்மெண்ட் செய்ய வேண்டி உள்ளது. அது படத்தின் ரிலீஸை பாதிக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆரம்பத்தில் பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு பின்னர் கடைசி நேரத்தில் பின்வாங்கிய புரூஸ் லீ படம் வரும் 24 ஆம் தேதி அல்லது மார்ச் 3ஆம் தேதி வெளியாகும் என தகவல் அடிபடுகிறது.