ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வணக்கம் சென்னை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கிருத்திகா உதயநிதி. இவர் உதயநிதி ஸ்டாலின் மனைவி. சினிமா தவிர பல்வேறு சமூக தொண்டு நிறுவனங்களில் பங்கேற்று பணியாற்றி வருகிறார். கிருத்திகா தற்போது திருநங்கைகள் பற்றிய விழிப்புணர்வு இசை ஆல்பம் ஒன்றை உருவாக்கி உள்ளார்.
சியர் என்ற அமைப்பு திருநங்கைகளின் உரிமைக்காக போராடி வருகிறது. இந்த அமைப்பில் கிருத்திகாகவும் இணைந்து திருநங்கைகளின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக பணியாற்றி வருகிறார். திருநங்கைகள் பற்றிய புரிதலை சமூகத்தில் உருவாக்கும் விதமாக ஸ்டாண்ட் பை மீ என்ற இசை ஆல்பத்தை இயக்கி உள்ளார். கவிஞர் விவேக் எழுதியுள்ள பாடல்களுக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதில் 12 திருநங்கைகள் ஆடியும், நடித்தும் இருக்கிறார்கள். ஆல்பம் வருகிற 14ந் தேதி வெளியிடப்படுகிறது.