ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கெளதம்மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தவர் மஞ்சிமாமோகன். அப்படத்தின் தெலுங்கு பதிப்பிலும் நாக சைதன்யாவுடன் நடித்தார். இரண்டு மொழியிலும் படம் ஓரளவு வெற்றி பெற் றது. என்றாலும், அந்த படத்திற்கு பிறகு மஞ்சிமாவுக்கு புதிய படங்கள் புக்காக வில்லை. அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்து வந்தபோது கமிட்டான சத்ரியன், இப்படை வெல்லும் படங்களில்தான் தற்போது அவர் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இதில் விக்ரம்பிரபுவுடன் நடித்துள்ள சத்ரியன் ரிலீசுக்கு தயாராகி விட்ட நிலையில், கெளரவ் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் இப்படை வெல்லும் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இதன்பிறகு தமிழில் தான் எதிர்பார்த்தபடி படங்கள் கிடைக்காத நிலையில், தெலுங்கில் நடிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள மஞ்சிமாமோகனிடம், சில தெலுங்கு டைரக்டர்கள் வெயிட் குறைக்குமாறு கூறியுள்ளார்களாம். அதனால் தற்போது ஓரளவு வெயிட் குறைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கும் மஞ்சிமாமோகன், தமிழைப்போலவே தெலுங்கிலும் கவர்ச்சியாக நடிப்பதில்லை என்ற கொள்கை விடாமல் கடைபிடிக்கப்போகிறாராம்.