ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
ஒரு சிறிய பிரேக்கிற்கு பிறகு நடிகர் கோவிந்தா ‛ஆ கயா ஹீரோ' என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வருகிற மார்ச் 3-ம் தேதி ரிலீஸாக உள்ளது. தற்போது படத்தின் புரொமோஷன் வேலையில் பிஸியாக இருக்கிறார் கோவிந்தா. நடிகர் கோவிந்தாவும், வருண் தவானும் ஒரே மாதிரியாக இருப்பதாக பாலிவுட்டில் ஒரு பேச்சு நிலவுகிறது.
இதுப்பற்றி சமீபத்தில் நடிகர் கோவிந்தா அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது... ‛‛வருண் தவானையும், என்னையும் ஒப்பிடுவது சரியல்ல. அவர் எப்படி என்னைப்போன்று இருப்பார். நான் படிக்காதவன், ஒரு கிராமத்தில் பிறந்த ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். ஆனால் வருண் அப்படியல்ல, பிறப்பிலேயே வசதியானவராகத்தான் பிறந்தார், அவரது அப்பா ஒரு இயக்குநர். வருண் தனது அப்பாவுடன் இரண்டு படங்களுக்கு மேல் பணியாற்றவில்லை, ஆனால் நான் அவருடன் 17 படங்கள் பணியாற்றியிருக்கிறேன்'' என்று கூறியுள்ளார்.