ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
2002ல் விஜய்-பிரியங்கா சோப்ரா நடித்த தமிழன் படத்தை இயக்கியவர் மஜீத். அந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்தார். அதையடுத்து கிமு, துணிச்சல், பைசா ஆகிய படங்களை இயக்கிய மஜீத், அடுத்தபடியாக பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு கதையை படமாக்கப்போகிறார். பிப்ரவரி 15-ந்தேதி முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. பெரும்பகுதி படப்பிடிப்பு சென்னையில்தான் நடைபெற உள்ளதாம்.
மேலும், இந்த படத்தில் நடிக்க சில முன்னணி நடிகைகளிடம் கால்சீட் கேட்டு வந்த மஜீத், தற்போது அஞ்சலி-சதா ஆகிய இருவரையும் புக் பண்ணியிருக்கிறார். முழுக்க முழுக்க இவர்களைச்சுற்றியே கதை பின்னப்பட்டுள்ளதாம். இன்றைக்கு சமுதாயத்தில் பெண்களுக்கு நடக்கும் சில விசயங்களை வெளிச்சம் போட்டு காட்டும் கதையம்சம் கொண்ட இந்த படத்திற்கு டார்ச்லைட் என்று டைட்டில் வைத்துள்ளாராம் மஜீத்.