14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற படம் எக்கடிக்கி பொத்தவா சின்னவாடா. நிகில் சித்தார்த், ஹீபால் படேல், நந்திதா ஸ்வேதா, நடித்திருந்த இந்தப் படத்தை வி.ஐ.ஆனந்த் இயக்கியிருந்தார். சாய் ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருந்தார், சங்கர் சந்த்ரா இசை அமைத்துள்ளார். ரூ.10 கோடியில் தயாரான இந்தப் படம் ரூ.50 கோடி வசூலித்து சாதனை படைத்தது.
இந்தப் படத்தை இப்போது தெலுங்கில் தயாரித்த மேகனா ஆர்ட்ஸ் பி.வி.ராவே, தமிழில் ரீமேக் செய்கிறார். தெலுங்கில் இயக்கிய வி.ஐ.ஆனந்தே இயக்குவார் என்றும் தெரிகிறது. ஜி.பி.பிரகாஷ்குமார், விஜய்சேதுபதி ஆகிய இருவரில் ஒருவர் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. தெலுங்கில் நடித்த ஹீரோயின்களே தமிழிலும் நடிக்க இருக்கிறார்கள். தெலுங்கு தயாரிப்பாளர் பி.வி.ராவுடன் இணைந்து எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதனும் இணைந்து தயாரிப்பார் என்று தெரிகிறது. இதேப்படம் இந்தியிலும் ரீ-மேக் ஆகும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அர்ஜுன் கபூர், சோனாக்ஷி சின்ஹா நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது.