ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜயசேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கியவர் பாலாஜி தரணீதரன். அந்த படத்திற்கு பிறகு அவர் இயக்கிய படம் ஒரு பக்க கதை. நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ்-மேகா ஆகாஷ் ஜோடி சேர்ந்த நடித்த இந்த படம் 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. என்றாலும் இன்னும் திரைக்கு வரவில்லை. ஆனால் அதையடுத்து காளிதாஸ் நாயகனாக நடித்த மீன் குழம்பும் மண்பானையும் படம் திரைக்கு வந்து விட்டது.
மேலும், ஒரு பக்க கதையில் நாயகியாக நடித்த மேகாஆகாஷ்க்கு அதையடுத்து கெளதம்மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்த என்னை நோக்கி பாயும் தோட்டா படவாய்ப்பு கிடைத்தது. அதனால், ஒரு பக்க கதை படத்தைப்பற்றி கவலைப் படாமல் பெரிய டைரக்டர், பெரிய நடிகரின் படம் கிடைத்து விட்டது என்று அந்த படத்தில் கமிட்டாகி உற்சாகமாக நடித்து வந்தார் மேகா ஆகாஷ். அதோடு முதல் படத்தில் நடிக்க சில கண்டிசன்களை போட்டு நடித்தவர், இரண்டாவது படத்தில் எந்தவித கண்டிசனும் போடாமல் நடித்தார்.
ஆனால் அப்படி அவர் நடித்து வந்த என்னை நோக்கி பாயும் தோட்டா படமும் தற்போது சில மாதங்களாக கிடப்பில் கிடக்கிறது. இப்படி தான் நடித்த இரண்டு படங்களுமே முடிவடையாமல் தாமதமாகிக்கொண்டிருப்பதால் பெரிய அளவில் பீல் பண்ணி வரும் மேகா ஆகாஷ், புதிய படங்களிலும் கமிட்டாக முடியாமல் புலம்பிக்கொண்டிருக்கிறார்.