ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன. ஆனாலும் அஜித்தின் ரசிகர்கள் மத்தியில் விவேகம் ஃபர்ஸ்ட்லுக்குக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. மற்றவர்களின் விமர்சனங்களை பொருட்படுத்தாமல் அஜித் ரசிகர்களின் வரவேற்பை எண்ணி உற்சாகத்திலிருக்கிறது 'விவேகம்' படக்குழு.
விவேகம் படத்தை திட்டமிட்டபடி ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதற்காக பரபரப்பாக இயங்கி வருகிறார் இயக்குநர் சிவா. 'விவேகம்' படத்தின் படப்பிடிப்பை மீண்டும் பல்கேரியாவில் இந்த மாத இறுதிக்குள் நடத்தி முடித்துவிட்டு மார்ச் மாதத்தில் எம்.ஜி.ஆர். ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.
இதற்காக கலை இயக்குனர் மிலன் ஃபெர்னான்டஸ் தலைமையில் பிரம்மாண்ட செட் ஒன்றை எம்.ஜி.ஆர். ஃபிலிம் சிட்டியில் உருவாக்கி வருகிறார்களாம். இந்த செட்டில் அஜித்துடன், பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் மோதும் சண்டைக் காட்சிகள் படமாக்கப்படுகிறது. 'விவேகம்' படத்தின் டீஸர் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு மே 1ஆம் தேதி அன்று வெளியாகிறது. 'விவேகம்' படத்தை விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளது சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம்.