ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஹாலிவுட், சீனா போன்று இப்போது ரஷ்யாவிலும் உலக தரத்திலான ஆக்ஷன் படங்கள் தயாராகி வருகிறது. அவற்றில் ஒன்று கார்டியன் தி சூப்பர் ஹீரோ என்ற படம். இப்படத்தை “மாபியா, அமெரிக்கன் ஹெஇஸ்ட் போன்ற படங்களை இயக்கிய அர்மேனிய இயக்குநர் சரிக் அண்ட்ரியாசியான் இயக்கியுள்ளார். இப்படத்தில் சூப்பர் ஹீரோ நட்சத்திரங்களாக ரஷ்ய நடிகர்கள் அலினா லணினா, செபாஸ்டின் சிசக், சன்சார் மதியேவ் மற்றும் ஆண்டன் பம்புஷ்னி ஆகியோர் நடித்துள்ளனர்.
இது உலக அளவில் வெளிவந்த சூப்பர் ஹரோ படங்களுள் ஒன்றாகும். ஹாலிவுடில் வெளிவரும் சூப்பர் ஹீரோ படங்களுக்கு இணையாக அதேப்போல் மிகச்சிறந்த தரத்தில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டிரைலர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பிப்பிரவரி மூன்றாம் தேதி வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இதன் இந்திய உரிமையை மூவிவேல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பெற்றுள்ளது. வருகிற பிப்ரவரி 24ஆம் தேதி இத்திரைப்படம் இந்தியா முழுவதும் வெளியாகவுள்ளது.