பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம் படத்தில் நடித்த அஜித், அதையடுத்து வேதாளம் படத்தில் நடித்தவர், தற்போது விவேகம் படத்தில் நடித்துக்கொண்டி ருக்கிறார். ஆக,வி எழுத்தில் அவர்கள் இணைந்து செயல்பட்ட முதல் இரண்டு படங்களுமே ஹிட்டடித்ததால் இந்த படத்திற்கும் வி-யில் தொடங்கும் விவேகம் என்ற டைட்டீலை வைத்துள்ளனர். அதோடு, வியாழக்கிழமை செண்டி மென்டை இந்த படத்திலும் தொடர்ந்துள்ளார் அஜித். அதன்காரணமாக புதன்கிழமை நள்ளிரவு 12 மணி ஒரு நிமிடத்திற்கு 57வது படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.
மேலும், இதற்கு முன்பு படங்களில் நடித்தபோது பலமுறை விபத்துக்களில் சிக்கிய அஜித்தின் உடம்பில் பலமுறை அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அதனால் அவரை ரிஸ்க்கான சண்டை காட்சிகளில் நடிக்க வேண்டாம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இருப்பினும், இந்த விவேகம் படத்திற்காக சிக்ஸ்பேக் உடல்கட்டுக்கு மாறியுள்ளார் அஜித். அந்த காட்சி பர்ஸ்ட் லுக்கில் வெளியாகியிருப்பதைப் பார்த்து ரசிகர்கள் மட்டுமின்றி பல கோலிவுட் ஹீரோக்களும் ஆச்சர்யமடைந்துள்ளனர். குறிப்பாக, நடிகர் ராகவா லாரன்ஸ், அஜித் சாரின் இந்த உடலமைப்பு என்னை பிரமிக்க வைக்கிறது என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதேபோல் குஷ்புவும் தனது டுவிட்டரில், நான்தான் அப்பவே சொன்னேனே தல தலதான் என்று குறிப்பிட்டுள்ளார்.