பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
சாட்டை யுவன் நடித்த கமரக்கட்டு, மகேந்திரன் நடித்த விந்தை படங்களில் நாயகியாக நடித்தவர் மனீஷாஜித். இவர் தற்போது தனது பெயரை ரெஹானா என்று மாற்றியுள்ளார். அதையடுத்து திமில், அப்பாத்தாவ ஆட்டையப் போட்டுட்டாங்க உள்பட சில படங்களில் நடித்து வருகிறார். இதில் அப்பாத்தாவ ஆட்டைய போட்டுட்டாங்க படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் ரெஹானா.
அந்த அனுபவம் குறித்து அவர் கூறுகையில், திமில் படத்தில் லீடு ரோலில் நடிக்கிறேன். இந்த படத்தில் அங்காடித்தெரு மகேஷ் நாயகனாக நடிக்கிறார். அவர் எனது காதலராக இருந்தபோதும் அவர் ஒரு மன்னிக்க முடியாத தவறு செய்தபோது அவருக்கு தண்டனை கொடுக்கும் வேடத்தில் நடிக்கிறேன். அதையடுத்து அப்பாத்தாவ ஆட்டையப்போட்டுட்டாங்க படத்தில் முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடிக்கிறேன். அதாவது ஹீரோ என்னை நிஜத்தில் காதலிப்பார். ஆனால் அவரது கனவிலும் இன்னொரு கதாபாத்திரத்தில் வந்து செல்வேன். ஒன்று கல்லூரி மாணவி வேடம். இன்னொன்று கனவு வேடம். இரண்டு வேடங்களிலுமே நிறைய வித்தியாசம் காட்டி நடிக்கிறேன். அதனால் இப்போது நடித்து வரும் படங்கள் திரைக்கு வரும்போது தமிழ் சினிமாவில் நானும் கவனிக்கப்படும் நடிகையாகி விடுவேன் என்கிறார் ரெஹானா.