ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி | இறுதிக்கட்டத்தில் 'கேர்ள் பிரண்ட்' : முதல் பாடல் வெளியீடு | புதுமுகங்களின் 'தி கிளப்' | பிளாஷ் பேக்: தயாரிப்பாளர் ஆன எஸ்.எஸ்.சந்திரன் | பிளாஷ்பேக்: மலையாளத்தின் முதல் சூப்பர் ஸ்டார் | விக்ரம், பிரேம்குமார் கூட்டணி உருவானது எப்படி | ரஜினி, கமல் இணைவார்களா? : காலம் கனியுமா? | காளிதாஸ் 2 வில் போலீசாக நடித்த பவானிஸ்ரீ | 2040ல் நடக்கும் ‛ரெட் பிளவர்' கதை |
பைரவா படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் படத்தை அட்லி இயக்குகிறார். தெறி படத்திற்கு பிறகு மீண்டும் இருவரும் இணைகிறார்கள். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த நல்வனுக்கு நல்லவன் தலைப்பு வைக்கப்படலாம் என்று தெறிகிறது. இதில் விஜய் ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், ஜோதிகா நடிக்கிறார்கள். பல வருட இடைவெளிக்கு பிறகு விஜய்யுடன் ஜோதிகா நடிக்கிறார். ஆனால் விஜய்க்கு ஜோடியாக இல்லை என்று கூறப்படுகிறது. இவர்கள் தவிர எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யராஜ், சத்யன் ஆகியோரும் நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார், ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் எடிட்டராகவும், முத்துராஜ் கலை இயக்குனராகவும், அனல் அரச சண்டை பயிற்சியாளராகவும் பணியாற்றுகிறார்கள்.
இதன் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இரண்டாவது கட்ட படப்பிடிப்பு வட இந்தியாவிலும், 3வது கட்ட படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளிலும் நடக்கிறது. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் என்.ராமசாமி தயாரிக்கிறார். இந் படத்துக்கென தேனாண்டாள் ஸ்டூடியோஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தை துவக்கி உள்ளார். படத்தின் பட்ஜெட் 70 கோடி என்றும், இதில் விஜய் சம்பளம் 20 கோடி எனவும், இயக்குனர் அட்லி சம்பளம் 13 கோடி என்றும் கூறப்படுகிறது. இயக்குனர் ராம நாராயணனால் தொடங்கப்பட்ட தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் 100 வது படம் இது.