சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
சமீபத்தில் வெளிவந்த துருவங்கள் 16 எனும் திரில்லர் திரைப்படத்தை இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கியிருந்தார். மாறுபட்ட திரைக்கதை அமைப்பினால் விமர்சக ரீதியாக வெற்றி கண்ட இப்படம், ரசிகர்களிடமும் வரவேற்பு பெற்றது. ரகுமான் முதன்மை வேடமேற்று நடித்த இப்படத்தை, தெலுங்கில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. தற்போது இப்படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாம். பிரபல தயாரிப்பாளர் ஸ்ரீநிவாஸ ராவ், துருவங்கள் 16 படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார். விஜய் ஆண்டனி நடிப்பில் தமிழில் ஹிட்டான பிச்சைக்காரன் படத்தை தெலுங்கில் பிச்சகடு எனும் பெயரில் டப் செய்து வெளியிட்டு லாபம் பார்த்த ஸ்ரீநிவாஸ் ராவ் அடுத்து துருவங்கள் 16 படத்தையும் டப் செய்து வெளியிடவுள்ளார்.