ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இயக்குனர் மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் பெரும் பகுதி காஷ்மீரில் படமாக்கப்பட்டது. காஷ்மீரை அதற்கு முன் அவ்வளவு அழகாக யாரும் காட்டியதில்லை. வெள்ளை மழையில் பார்ப்பவர்களை நனைய வைத்த படம் அது. தற்போது காற்று வெளியிடை படத்திற்காக மீண்டும் ரசிகர்களை வெள்ளை மழையில் நனைய வைக்க இருக்கிறார்.
நேற்று குடியரசு தினத்தையொட்டி காற்று வெளியிடை படத்தின் 50 விநாடி டீசர் ஒன்று வெளியிடப்பட்டது. அது "நின்றன் காதலை எண்ணி களிக்கின்றேன்..." என்ற குரலோடு தொடங்குகிறது. வெள்ளி பனி மலையின் ஹெலிஷாட்டில் தொடங்கும் காட்சி அதிதிராவின் பனியில் பூத்த முகத்தில் சில விநாடிகள் நின்ற பின்பு சிகரத்தில் கார்த்தி நடக்கிற விநாடிக்கு கடந்து செல்கிறது. "அவன் வருவான்... வருவான்..." என பெண்ணின் குரல் ஒலிக்கிறது, இறுதியாக "காற்றுவெளியிடை கண்ணம்மா..." என்ற பாரதியாரின் வரிகளோடு முடிகிறது.
ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் காஷ்மீர் அழகை தள்ளி தரப்போகிறார் என்கிறது டீசரின் காட்சிகள். ராணுவ விமான பைலட் கார்திக்கிற்கும், அதிதிக்குமான காதல்தான் படம். கிட்டத்தட்ட ரோஜாவின் இரண்டாம் பாகம் என்று சொல்லலாம். கே.பி.சி.லலிதா, ஷரத்தா ஸ்ரீநாத், ருக்மணி விஜயகுமார், டெல்லி கணேஷ், ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ளனர். படம் ஏப்ரலில் ரிலீஸாகிறது.